ஆஸ்கார் விருது பெற்ற இசையமைப்பாளர் மரணம்

பிரபல ஜப்பானிய இசையமைப்பாளர் ரியுச்சி சகாமோட்டோ. இவர் ஆங்கிலம் மற்றும் ஜப்பானிய மொழிகளில் 1987-ல் வெளியான ‘தி லாஸ்ட் எம்பரர்’ படத்துக்கு இசையமைத்தமைக்காக சிறந்த இசையமைப்பாளருக்கான ஆஸ்கார் விருதை வென்றார்.

மேலும் ‘மேரி கிறிஸ்துமஸ், மிஸ்டர் லாரன்ஸ்’ படத்துக்கு இசையமைத்து பாப்டா விருதை பெற்றார். கிராமிய விருதும் பெற்றுள்ளார். ஏராளமான படங்களுக்கு பின்னணி இசையமைத்து இருக்கிறார். இசை ஆல்பங்களும் வெளியிட்டு உள்ளார். ரியுச்சி சகாமோட்டோவுக்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டது. இதற்காக சிகிச்சை பெற்று வந்தார். ஆனாலும் சிகிச்சை பலன் இன்றி மரணம் அடைந்தார். அவருக்கு வயது 71.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here