ரமலான் சந்தைக்கு மூன்று வழிகள்

கோலாலம்பூர், ஏப்.9-

ரமலான் சந்தை பிரச்சினைகள் பரவலாகப் பேசப்படுகின்றன.. ரமலான் மாதத்தில் சந்தை என்பது மிக முக்கியமானதாக இருக்கும். இது கலாச்சாரமாகிவிட்டது. மற்ற இனத்தவர்களுக்கும் சந்தை என்பது முக்கியமானதாகவே இருந்துவந்திருக்கிறது.

கொரோனா-19 ரமலான் சந்தைக்குப் பெருத்த இடையூறாய் அமைந்திருப்பதால் சந்தையை நடத்த முடியுமா? என்பதில் ,சர்ச்சை கிளம்பியிருக்கிறது.
இந்த சர்ச்சைக்கு பல தரப்புகள் பல கோணங்கலளிலிருந்து ஆலோசனைகள் கூறிவருகின்றன.

மக்கள் நடமாட்டக் கூடல் கட்டுப்பாட்டை மீறவும் முடியாது என்பதால் சந்தைக்கு வாய்ப்பில்லை என்றே கருத்தப்படுகிறது. அதற்கு மாற்றாக என்ன செய்யமுடியும் என்றும் கூறப்பட்டிருக்கிறது சில தரப்பினர் ரமலான் சந்தை நேரத்திற்குப்பின் கூடல் கட்டுப்பாட்டைக் கையாளலாம் என்றும் கூறுகின்றனர். இதற்கான பதில் முழுமையாகக் கிடைக்கவில்லை.

இதில், மக்களின் கூடல் இடைவெளிப் பிரச்சினை இருப்பதால் இது சாத்தியமாகுமா என்பதும் கேள்விக்குறியாகவே இருக்கிறது.

இதற்கும் மேலாக மூன்று வழிகளில் சந்தைப் பிரச்சினையைத் தீர்க்கும் வழியை அமைச்சர் டான்ஶ்ரீ அனுவார் மூசா தெரிவித்திருக்கிறார்.

காரில் இருந்தபடியே ஊடுருவிபெறுதல், பொட்டலம் கட்டிக்கொல்ளல் அழைப்புமுறையில் முன்கூட்டியே பணம் செலுத்தி ஆர்டர் கொடுப்பது என்ற மூன்று வழிகளின் மூலம் நிறைவேற்றிக் கொள்ளலாம் என்கிறார் அவர்.

சந்தைகளில் கூட்டம் இல்லாமல் செய்ய இம்முறை சாதகமாக இருக்கும். அதே வேளை போடப்பபடும் கூடாரத்தின் இடைவெளி 20 மீட்டர் இருக்கவேண்டும். ஆன்லைன் மூலம் விநியோகிக்கும் உணவு வகைகள் பதிவு பெற்றவர்களிடமிருந்து விநியோகப் பையன்கள் வழி அனுப்பப்படும்.

இதற்கான இடம் உள்ளூர் பொறுப்பாளார்களால் நிர்வகிக்கப்படும். தேர்வு பெற்ற விநியோகஸ்தர்கள் இதனை நிர்வகிப்பர்.

இந்த மூன்று வழிகளில் சந்தையை வழிநடத்துவதற்கு சரியான வழிமுறைகள் வகுக்கப்படுகின்றன.

இதற்கான புதிய பதிவுகள் ஏப்ரல் 13ஆம்நாள் நடைபெறவிருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கின்றன. ஏப்ரில் 19ஆம்நாள்வரை பதிந்துகொள்ள www.facebook.com/KemWP.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here