இங்கிலாந்தில் கடல் அலையில் சிக்கி இந்திய பொறியியல் மாணவி பலி

தெலுங்கானாவில் ஐதராபாத் நகரை சேர்ந்தவர் சசிதர ரெட்டி. இவரது மகள் சாய் தேஜஸ்வி கொம்மரெட்டி. விண்வெளி துறையில் பொறியியல் முதுநிலை பட்டப்படிப்பு படிப்பதற்காக தேஜஸ்வி இங்கிலாந்து நாட்டுக்கு சென்று உள்ளார்.

இந்த நிலையில், தோழிகளுடன் சேர்ந்து பீச்சுக்கு சென்று உள்ளார். அப்போது கடல் அலையில் அவர் சிக்கியுள்ளார். அவர் உள்பட 3 பேர் கடுமையான அலையில் சிக்கி உயிரிழந்து உள்ளனர்.

இவர்களில் தேஜஸ்வியின் உடலை மீட்பு குழுவினர் முதலில் மீட்டனர். அதற்கடுத்த நாள் மற்ற 2 பேரின் உடல்களும் மீட்கப்பட்டு உள்ளன. இதுபற்றி சசிதர ரெட்டி கூறும்போது, தேர்வு எழுதிய பின்னர் ஓய்வாக இருப்பதற்காக அவர்கள் சென்றுள்ளனர். ஆனால், துரதிர்ஷ்டவசத்தில் கடல் அலையில் சிக்கி அவர்கள் உயிரிழந்து விட்டனர். 

தேஜஸ்வியின் உடலை இந்தியா கொண்டு வர இருந்த நடைமுறை சிக்கல்களை தீர்க்க உதவினர் என கூறியுள்ளார். இதன்படி, தேஜஸ்வியின் உடல் நாளை (வெள்ளி கிழமை) ஐதராபாத்துக்கு கொண்டு வரப்பட உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here