பாலிவுட்டின் முன்னணி தயாரிப்பாளர் யஷ் சோப்ராவின் மனைவி மரணம்

பாலிவுட்டின் முன்னணி தயாரிப்பாளர் யஷ் சோப்ரா. இவரது மனைவி பமீலா சோப்ரா. 74 வயதான பமீலா சோப்ரா பாடகி, எழுத்தாளர், ஆடை வடிவமைப்பாளர் மற்றும் பல யஷ் ராஜ் திரைப்படங்களின் இணை தயாரிப்பாளராகவும் இருந்தார். நிமோனியாவால் பாதிக்கப்பட்ட பமீலா சோப்ரா கடந்த சில நாட்களாக மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் நேற்று காலை உயிரிழந்தார். அவரது இறுதிச்சடங்கும் நேற்று மாலை நடைபெற்றது. இதில் பாலிவுட் பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

பமீலா சோப்ராவின் மரணத்தையொட்டி சல்மான்கான் நேற்று தான் ஏற்பாடு செய்திருந்த ‘கிசி கா பாய் கிசி கி ஜான்’ படத்தின் சிறப்பு காட்சியை ரத்து செய்தார். இந்த படம் இன்று வெளியாகி உள்ளது. இது தமிழில் சிவா இயக்கத்தில் அஜித் நடித்த ‘வீரம்’ படத்தின் ரீமேக் ஆகும். யஷ் ராஜ் பிலிம்ஸ் நிறுவனம் சல்மான்கான் நடித்த பல படங்களை தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here