வரும் ஜூன் 22ஆம் தேதி மோடி அமெரிக்கா பயணம்

பிரதமர் மோடி வருகிற ஜூன் 22-ந்தேதி அமெரிக்காவுக்கு அதிகாரப்பூர்வ சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். அவரது இந்த பயணத்தின்போது, பிரதமர் மோடிக்கு, அமெரிக்க அதிபர் பைடன் மற்றும் அவரது மனைவி ஜில் பைடன் ஆகியோர் விருந்தளிக்கின்றனர் என அமெரிக்காவில் உள்ள வெள்ளை மாளிகை வெளியிட்டு உள்ள அறிக்கை தெரிவிக்கின்றது.

அவரது இந்த பயணம், இரு நாடுகளின் வெளிப்படையான, திறந்த நிலையிலான, வளம் சார்ந்த பகிரப்பட்ட உள்ளார்ந்த செயல்பாடுகளுக்கு வலிமை சேர்க்கும். இந்தோ-பசிபிக் பிராந்திய பகுதிகளை பாதுகாக்கும். பாதுகாப்பு துறை, தூய்மையான எரிசக்தி மற்றும் விண்வெளி உள்ளிட்ட துறைகளில் நமது செயல்திட்டம் சார்ந்த தொழில்நுட்ப உறவை மேம்ப்டுத்தும் வகையிலான பகிரப்பட்ட தீர்மானம் ஆகியவற்றையும் பாதுகாக்கும் என அந்த அறிக்கை தெரிவிக்கின்றது.

பிரதமர் மோடி இதற்கு முன்பு, கடந்த 2021-ம் ஆண்டு செப்டம்பர் 23ஆம் அமெரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். கடந்த 2022-ம் ஆண்டு குவாட் தலைவர்களின் உச்சிமாநாட்டின் ஒரு பகுதியாக, பிரதமர் மோடி மற்றும் அதிபர் பைடன் ஆகிய இருவரும் ஐ.சி.இ.டி. எனப்படும் முக்கியம் வாய்ந்த மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்பத்திற்கான திட்ட தொடக்கங்களை அறிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here