சிகிச்சை பெற மறுத்த 12 காசநோயாளிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது

கடந்த நான்கு ஆண்டுகளாக நோய்க்கான சிகிச்சையைத் தொடரத் தவறியதற்காக நாடு முழுவதும் 12 காசநோயாளிகளுக்கு எதிராக சுகாதார அமைச்சகம் சட்ட நடவடிக்கை எடுத்துள்ளதாக அதன் துணை அமைச்சர் லுகானிஸ்மன் அவாங் சவுனி தெரிவித்துள்ளார். இவற்றில் இரண்டு வழக்குகள் கடந்த ஆண்டு பதிவு செய்யப்பட்டதாக அவர் கூறினார். அவர்கள் அனைவரும் தொற்று நோய்கள் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு சட்டம் 1988ன் கீழ் சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டனர்.

காசநோய்க்கான சிகிச்சையானது நான்கு வகையான நுண்ணுயிர் எதிர்ப்பிகளின் கலவையாகும். மேலும் ஆறு மாதங்களுக்கு தொடர்ந்து சிகிச்சை எடுத்து கொள்ள வேண்டும். சமீபத்திய தரவுகளின் அடிப்படையில், இந்த 12 நோயாளிகளும் சிகிச்சை பெறுவதை நிறுத்திவிட்டனர். மேலும் சட்டத்தின்படி சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று லுகானிஸ்மான் இன்று மலேசியா தெரெங்கானு பல்கலைக்கழகத்தில் உலக காசநோய் தினம் 2023 நிகழ்வை தொடக்கி வைத்த பின்னர் கூறினார்.

அத்தகைய நோயாளிகளுடன் அமைச்சகம் தொலைபேசி அல்லது ஆன்லைன் மூலம் தொடர்பு கொள்கிறது என்றார். இது தோல்வியுற்றால், அவர்களைக் கண்டுபிடிக்க சுகாதார அதிகாரிகள் அனுப்பப்படுகிறார்கள். காசநோய் சோதனை போன்ற செயல்களைக் கண்டறிந்து செயல்படுத்த உதவும் தன்னார்வத் திட்டமான ‘மைசாம்பியன்: சமூக சுகாதார முகவர்’ திட்டத்தை அமைச்சகம் தொடங்கியுள்ளது.

கடந்த ஆண்டு காசநோயால் 2,572 இறப்புகள் பதிவாகியுள்ளன – 2021 உடன் ஒப்பிடும்போது 12% அல்லது 284 வழக்குகள் அதிகரித்துள்ளது என்று சுகாதார அமைச்சர் டாக்டர் ஜாலிஹா முஸ்தபா முன்பு கூறினார். கடந்த ஆண்டு 25,391 வழக்குகள் பதிவாகியுள்ளன. இது முந்தைய ஆண்டில் பதிவான 21,727 வழக்குகளுடன் ஒப்பிடும்போது 3,664 அல்லது 17% அதிகமாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here