இரகசிய ஆவணங்களை தவறாகக் கையாண்டதாக டிரம்ப் மீது குற்றச்சாட்டு

அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப், அதிபர் பதவியில் இருந்து விலகிய பிறகும், தனது புளோரிடா எஸ்டேட்டில் அரசின் ரகசிய ஆவணங்களை வைத்திருந்ததாக அல்லது தவறாகக் கையாண்டதாக நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படுகிறார்.

அமெரிக்க நீதித்துறை வரலாற்றில் மிகவும் குறிப்பிடத்தக்க வழக்குகளில் ஒன்றாக இந்த வழக்கு மீண்டும் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இக் குற்றச்சாட்டுகள் ட்ரம்பிற்கு இதுவரை இல்லாத அளவிற்கு மிகப்பெரிய சட்ட ஆபத்தை ஏற்படுத்தலாம் என வல்லுநர்கள் கூறுகின்றனர்.

இது தொடர்பாக டிரம்ப் கூறுகையில், போலியான குற்றச்சாட்டுகளை சுமத்தி, ஊழல் நிறைந்த பைடன் நிர்வாகம் என்னை முடக்க பார்க்கிறது. ஆவணங்களை கையாண்டது குறித்து என் மீது குற்றம்சுமத்த பார்க்கிறது எனக்கூறியுள்ளார். ஆனால், டிரம்ப்பின் குற்றச்சாட்டை அமெரிக்க நீதித்துறை இன்னும் உறுதி செய்யவில்லை.

இவ்வழக்கின் குற்றப்பத்திரிகையின்படி, இரகசிய ஆவணங்களை தவறாகக் கையாண்டது தொடர்பான ஏழு குற்றச்சாட்டுகள் ட்ரம்ப் மீது சுமத்தப்பட்டுள்ளன.

இது தொடர்பில் டிரம்ப் தனது சமூக ஊடகத் தளமான Truth Social இல் நேற்று வியாழன் (ஜூன் 8) இரவு அறிவித்தார், “தன் மீது குற்றம் சாட்டப்பட்டதாக நீதித்துறை வழக்கறிஞர்கள் அவரது சட்டக் குழுவிற்குத் தெரிவித்ததாகவும், வரும் செவ்வாய்கிழமை (ஜூன் 13) மதியம் மியாமியில் உள்ள நீதிமன்றத்தில் ஆஜராக உள்ளதாகவும்” அவர் தெரிவித்தார்.

இந்த வழக்கில் வேறு யாராவது குற்றம் சாட்டப்படுவார்களா என்பது உடனடியாகத் தெரியவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here