மெக்சிகோவில் பெரிய அளவில் இறந்து கிடந்த பறவைகள்… வெப்பநிலை காரணமா?

மெக்சிகோ கரையில் பெரிய அளவில் பறவைகள் மாண்டுகிடந்ததற்குப் பசிபிக் பெருங்கடலின் வெப்பநிலை அதிகரிப்பு காரணமாக இருக்கக்கூடும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அவை பறவைக் காய்ச்சலால் உயிரிழக்கவில்லை என்றும் பட்டினியால் இறந்ததாகவும் மெக்சிகோவின் வேளாண்மை, சுற்றுப்புற அமைச்சுகள் தெரிவித்திருந்தன.

El Nino பருவநிலை மாற்றத்தால் பசிபிக் பெருங்கடலின் வெப்பநிலை அதிகரித்ததாக அமைச்சகங்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டன.

பெருங்கடலின் மேற்பரப்பில் உள்ள நீர் சூடாவதால் மீன்கள் ஆழமாகச் செல்கின்றன. அதனால் பறவைகளால் அவற்றை வேட்டையாட முடியவில்லை.

மெக்சிகோவில் குறிப்பாக Buller’s Shearwater வகை பறவைகள் அதிகம் பாதிக்கப்பட்டன.

பசி காரணமாக இப்பறவைகள் இறந்து போய், கரையொதுங்குவதாகத் தெரிவிக்கப்பட்டது. இதுபோன்ற சம்பவம் பெரு, சிலி ஆகிய நாடுகளிலும் நடந்ததாகவும் அறியமுடிகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here