வரவிருக்கும் சிலாங்கூர் மாநிலத் தேர்தலுக்கான பக்காத்தான் ஹராப்பான் (PH) மற்றும் பாரிசான் நேஷனல் (BN) இடையேயான பேச்சுவார்த்தையில் இரண்டு இடங்கள் மட்டுமே இறுதி செய்யப்படவில்லை.
அடுத்த நடவடிக்கைக்காக இரண்டு இடங்களும் விரைவில் மத்திய கட்சித் தலைமைக்கு பரிந்துரைக்கப்படும் என்று சிலாங்கூர் மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
இதுவரை 95% இட ஒதுக்கீடு பேச்சுவார்த்தை முடிந்துவிட்டது. (PH-BN) பேச்சுவார்த்தைகள் முடிந்து இரண்டு இடங்கள் மட்டும் முடிவு செய்யப்படவில்லை, இது தலைமை பொறுப்பால் முடிவு செய்யப்படும் என்று அவர் 2023 சிலாங்கூர் மெகா வேலை வாய்ப்பு திட்டத்தை தொடக்கி வைத்த பின்னர் செய்தியாளர்களிடம் கூறினார்.
சிலாங்கூரில் 56 இடங்களில் போட்டி நடைபெறவுள்ளது. பினாங்கு, நெகிரி செம்பிலான், கெடா, கிளந்தான் மற்றும் தெரெங்கானு ஆகிய இடங்களிலும் தேர்தல்கள் நடைபெறும்.





















