பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் நேற்று கனமழை பெய்தது. ஷேக்புரா, நரொவெல் ஆகிய மாவட்டங்களில் கனமழை நீடித்து வருகிறது. கனமழை காரணமாக ஒரு சில பகுதிகளில் நிலச்சரிவு, வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், பாகிஸ்தானில் கனமழை பெய்து வரும் நிலையில் மின்னல் தாக்கி 10 பேர் உயிரிழந்துள்ளனர். அத்தோடு பலர் படுகாயமடைந்துள்ளனர்.
படுகாயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அதேவேளை, பருவமழைக்கு முந்தைய காலம் தொடங்கியுள்ளதாகவும் வரும் 30ம் தேதி வரை நாட்டின் பல்வேறு மாகாணங்களில் கனமழை பெய்யக்கூடும் என பாகிஸ்தான் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.