பொருட்கள் விலை அதிகரிப்பால் எழுந்துள்ள பிரச்சினைகள் KPDN கண்காணிக்கிறது

நாட்டில் பொருட்களின் விலைகள் மிகக் கடுமையாக உயர்வு கண்டிருக்கும் நிலையில் சாமானியர்கள் அதனைச் சமாளிப்பதற்குப் பெரும் போராட்டத்தையே நடத்திவருகின்றனர். முன்பு மளிகைச் சாமான்களுக்கு மாதம் ஒன்றுக்கு 200 ரிங்கிட் செலவிடப்பட்டது. இப்போது மாதத்திற்கு 500 ரிங்கிட் செலவிட வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது.

இதனால் சாமானியர்கள் முதல் நடுத்தர வர்க் கத்தினரும் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கின் றனர். குறிப்பாக குறைந்த வருமானப் பிரிவைச் சேர்ந்த பி40 தரப்பினரும் வறிய ஏழைகளும் மிகுந்த சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

வரும் ஆகஸ்டு மாதம் முதல் பொருட்களின் விலை மேலும் 20 விழுக்காடு அதி கரிக்கும் சாத்தியம் இருப்பதாகக் கூறப்படுகிறது. மளிகைக்கடைகள், பேரங்காடிகள் போன்றவற்றில் பொருட்களின் விலைகள் 20 முதல் 35 விழுக்காடு வரை உயர்வு கண்டிருக்கின்றன.

இந்தப் பொருட்கள் அனைத்தும் அன்றாடத் தேவைகளுக்கானதாகும். இவற்றில் உண வுப் பொருட்களும் அடங்கும். அரிசி, சமையல் எண்ணெய், பால் மாவு, கோதுமை மாவு போன்றவற்றின் விலைகளும் கணிசமாக உயர்வு கண்டுள்ளன.

அண்மையில் கிளாஸ்டர் சீனியின் விலையும் கிட்டத்தட்ட 80 விழுக்காடு உயர்வு கண் டிருக்கிறது. ஒற்றுமை அரசாங்கத்தில் இடம்பெற்றுள்ள உள்நாட்டு வாணிப, பயனீட் டாளர் நலத்துறை அமைச்சு (KPDN) இந்த விலை அதிகரிப்பைத் தொடர்ந்து கண்காணித்து வருகிறது.

இருப்பினும் விலை அதிகரிப்பைத் தவிர்க்க இயலாத சூழ்நிலையை நாடு எதிர் கொண்டிருக்கிறது. உலகளாவிய சந்தையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள், இந்த நிலைக்கு முக்கியக் காரணமாக இருக்கின்றது.

கோவிட்-19 தொற்றுப் பரவல் உலகளவில் ஏற்படுத்திய மிகப்பெரிய தாக்கம் உலக நாடுகளின் உற்பத்தியையும் ஏற்றுமதியையும் கடுமையாகப் பாதித்திருக்கிறது. உள்நாட்டிலும் இந்தப் பாதிப்பை எதிர்கொள்ள வேண்டிய நிலை உள்ளது.

*இந்நிலையில் உள்நாட்டு வாணிப, பயனீட்டாளர் நலத்துறை அமைச்சு பொருட் களின் விலைகளை ஒவ்வொரு நாளும் கண்காணித்து வருகிறது. விலைப்பட்டியல் வைக்கப்பட வேண்டும் என்பதில் அமைச்சு உறுதியாக இருக்கிறது. இதனை மீறுவோர் மீது நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது.

* சமையல் எண்ணெய், கோதுமை மாவு, எல்பிஜி எனப்படும் திரவ கியாஸ் ஆகிய மூன்று முக்கியப் பொருட்களுக்கு அமைச்சு உதவி மானியம் வழங்குகிறது.

* 1961 கொள்முதல் கட்டுப்பாட்டுச் சட்டம், 2021 விலைக் கட்டுப்பாட்டுச் சட்டம் ஆகியவற்றின் கீழ் ஓப் தெர்ஜா, ஓப் மெனு, ஓப் மானிஸ், ஓப் திரிஸ், ஓப் 516 ஆகிய சோதனை நடவடிக்கைகளை அமைச்சு தொடர்ந்து அமல்படுத்தி வருகிறது.

* நிர்ணயிக்கப்பட்ட விலையைக் காட்டிலும் அதிக லாபம் சம்பாதிப்பதற்காகக் கூடு தல் விலையில் பொருட்களை விற்பனை செய்பவர், விற்பனை செய்யப்படும் இடம் ஆகியவற்றைப் பொதுமக்கள் நேரடியாகப் புகார் செய்வதற்கு Esiadu எனும் புகார் தளத்தையும் அமைச்சு அறிமுகம் செய்திருக்கிறது.

* விலைக் கட்டுப்பாட்டையும் அமைச்சு அமல்படுத்தியிருக்கிறது. நிர்ணயிக்கப்பட்ட விலையைக் காட்டிலும் அதிக விலையில் பொருட்களை விற்போருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

* வாழ்க்கைச் செலவின நடவடிக்கை மன்றம் கொள்கை, வியூகம், திட்ட செயலாக் கம் தொடர்பான நிர்வாகக் குழுவுக்கு ஆலோசனைகளை நல்கி வருகிறது. இந்த ஆலோசனைகளின் கீழ் பொருட்கள் விலைக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் முன்னெடுக்கப் படுகின்றன.

* பாயோங் ரஹ்மா – மெனு ரஹ்மா, ரஹ்மா விற்பனை, பக்கோல் ரஹ்மா போன்ற 3 திட்டங்களை மக்கள் நலன்களுக்காக அறிமுகம் செய்துள்ளது. இத்திட்டத்தின் கீழ் மிகக்குறைந்த விலையில் பொதுமக்கள் பொருட்களை வாங்குவதற்கு வழி செ ய்யப் பட்டிருக்கிறது. ஏழைகளுக்கு மிகவும் உகந்த ஒரு திட்டமாக இது விளங்குகின்றது. மக்களின் நிதிச் சுமையைக் குறைப்பதற்கு பாயோங் ரஹ்மா திட்டம் மிகப்பெரிய பங்களிப்பை வழங்கி வருகிறது.

மக்கள் நலனில் அக்கறைகொண்டிருக்கும் ஒற்றுமை அரசாங்கம் பாயோங் ரஹ்மா திட்டத்தின் கீழ் ஏழை எளியோர் வாழ்க்கையில் ஒரு புத்தொளியை ஏற்படுத்தி இருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here