மலேசிய சுற்றுலாத் தலங்களுள் முக்கிய அங்கம் வகிக்கும்  மிருகக்காட்சி சாலை

      மிருகக்காட்சி சாலை என்றாலே சிறியவர் முதல் பெரியவர் வரையில் அனைவரின் முகத்திலும் மகிழ்ச்சி பொங்கும். குறிப்பாக பெரியவர்களுள் இருக்கும் சிறுபிள்ளை குறும்புத்தனத்தையும் இதில் காணலாம். இன்றும் கூட பலரும் தங்களின் பொழுது போக்கை மகிழ்ச்சிகரமாகவும் ஆக்க கரமாகவும் கழிப்பதற்கு மிருகக்காட்சி சாலையை தான் தேர்வு செய்கின்றனர். இந்த மிருகக்காட்சி சாலை மலேசியாவின் முதன்மை சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக விளங்குகின்றது.

      ஒரே இடத்தில் மிருகங்கள் அனைத்தையும் காண்பதற்கான வாய்ப்பை ஏற்படுத்தித் தரும் இந்த மிருகக்காட்சி சாலை நாட்டின் அடையாளச் சின்னங்களில் ஒன்று எனவும் கூறலாம்.

மலேசிய நாட்டின் மிருகக்காட்சி சாலை அமைப்பு மேலாண்மை செய்கிறது. மலேசியர்கள் காண முதல் உள்நாட்டு மிருக காட்சி சாலையை நீர் வகிப்பதற்காக உருவாக்கப்பட்ட அமைப்பு இதுவாகும்.

    1963ஆம் ஆண்டு நவம்பர் 14ஆம் தேதி இந்த மிருக காட்சி சாலை அதிகாரப்பூர்வமாக திறக்கப்பட்டது. இதில் சிங்கம், புலி, கரடி, நரி, ஒட்டகச்சிவிங்கி, காண்டாமிருகம் உள்ளிட்ட விலங்குகளும் முதலை, பாம்பு வகைகள் போன்ற ஊர்வனமும் கழுகு, கொக்கு உள்ளிட்ட பறவைகளும் உள்ளன.

 மொத்தமாக 476 வகையிலான ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட விலங்குகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ள. மிருகக்காட்சி சாலை தலைநகரில் இருந்து சுமார் ஐந்து கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள உலுகிள்ளான் பகுதியில் 110 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது. கடந்த ஆண்டுகளில் இந்த மிருகக் காட்சி சாலை பல்வேறு பரிணாமங்களைக் கடந்துள்ளது. குறிப்பாக இதில் காட்சிப்படுத்தப்படும் விலங்குகள் அதற்கு ஏற்ற நில, வாழ்வியல் சூழலில் வைக்கப்பட்டுள்ளன. இதற்காகவே அவற்றின் தங்கும் இடங்கள் பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளன.

    மிருகக்காட்சி சாலையில் மிருகங்களை பார்வையிடுவது மட்டுமன்றி இன்னும் பல நசை மிகுந்த அங்கங்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக பிறந்தநாள் உள்ளிட்ட கொண்டாட்டங்களையும் அங்கு நடத்தலாம். அது தவிர அவ்வப்போது விலங்குகள், மீன்கள் சார்ந்த விளையாட்டு அங்கங்களும் நடத்தப்படும்.

    இந்த மிருக காட்சி சாலையை பார்வையிட வரும் மக்களுக்கு சிறப்பு கட்டணக் கழிவுகளும் வழங்கப்படுகின்றன. குறிப்பாக மாணவர்களுக்கான கட்டணத்தில் சிறப்பு கழிவுகளும் வழங்கப்படுகின்றன.

   அதனிடையே கடந்த ஆண்டு மிருகக்காட்சி சாலைக்கு வருகை தந்த பார்வையாளர்களின் எண்ணிக்கை உயர்ந்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிலும் 2022 ஆம் ஆண்டு சனவரி மாதம் தொடங்கி சூலை மாதம் வரையில் மிருகக்காட்சி சாலைக்கு வருகை தந்தவர்களின் எண்ணிக்கையை காட்டிலும் கடந்த ஆண்டு இதே குறிப்பிட்ட காலகட்டத்தில் வருகை தந்தவர்களின் எண்ணிக்கை 40 விழுக்காடு வரை உயர்ந்திருப்பதாக கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here