சவுதி அரேபியாவிற்குள் நுழைய ஹாடி அவாங்கிற்கு தடையா? உண்மையில்லை என்கிறது PAS

பாஸ் (PAS) கட்சித் தலைவர் டான்ஸ்ரீ அப்துல் ஹாடி அவாங்கிற்கு சவுதி அரேபியா நாட்டுக்குள் நுழைய அந்நாட்டு அரசாங்கம் தடை விதித்துள்ளதாக கூறப்படும் செய்தியை பாஸ் மறுத்துள்ளது.

அப்துல் ஹாடிக்கு அனைத்துலக முஸ்லிம் அறிஞர்கள் சங்கத்துடன் (IUMS) தொடர்பு இருந்ததால் அவருக்கு சவுதி அரேபியாவிற்குள் நுழைய தடை விதிக்கப்பட்டது என்று கூறப்பட்டிருந்தது.

சவுதி அரேபியாவால் வெளியிடப்படும் அதிகாரப்பூர்வ அறிக்கைகள் கிரிகோரியன் நாட்காட்டிக்குப் பதிலாக ஹிஜ்ரி நாட்காட்டியைப் பயன்படுத்தும் என்று பாஸ் இன்று (ஆகஸ்ட்டு 1) வெளியிட்டுள்ள தனது பேஸ்புக் பதிவில், தெரிவித்துள்ளது.

மேலும், “பாஸ் தலைவர் தற்போது IUMS இன் துணைத் தலைவர் இல்லை என்றும், வரவிருக்கும் ஆறு மாநிலத் தேர்தல்களை முன்னிட்டு அவரது நற்பெயருக்கு களங்கம் உண்டாக்கும் வகையில் இந்த தகவலை பரப்புகிறார்கள் என்றும்  அப்பதிவில் பாஸ்  குறிப்பிட்டிருந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here