ஷா ஆலம், ஆகஸ்ட்டு 2:
கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 30) ரவாங்கில் உள்ள ஒரு மஸ்ஜிட்டில் ஃபாஹ்மி ஃபாட்சில் ஆற்றிய உரையில் தேர்தல் தொடர்பான எந்த பிரச்சாரத்தின் எந்தக் கூறுகளும் இல்லை என்று, சிலாங்கூர் காவல்துறை தலைவர் டத்தோ ஹுசைன் உமர் கான் தெரிவித்தார்.
தகவல் தொடர்பு மற்றும் இலக்கவியல் அமைச்சர் பேசிய 12 நிமிட வீடியோ பதிவை தாம் ஆய்வு செய்ததாக சிலாங்கூர் காவல்துறை தலைவர் கூறினார்.
“குறித்த காணொளியில் ஃபாஹ்மி, 1975 இசைக்குழுவைப் பற்றி (பிரச்சினை) விளக்கிக் கொண்டிருந்தார், மாறாக அந்த காணொளியில் பிரச்சாரத்தின் எந்த கூறுகளையும் காணவில்லை என்று, மாநில காவல்துறை தலைமையகத்தில் இன்று புதன்கிழமை (ஆகஸ்ட் 2) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறினார்.
இது தொடர்பான விசாரணைக்கு உதவ மொத்தம் எட்டு சாட்சிகள் அழைக்கப்பட்டனர்,” என்றும் அவர் மேலும் கூறினார்.
“தவறான அறிக்கையை வெளியிட்டதற்காக வீடியோவை பரப்பிய நபரை நாங்கள் கண்காணிக்கிறோம்.
“மேலும் இவ்வழக்கு குற்றவியல் சட்டத்தின் பிரிவு 500, தகவல் தொடர்பு மற்றும் மல்டிமீடியா சட்டம் பிரிவு 233 மற்றும் தேர்தல் குற்றங்கள் சட்டம் 1954 இன் பிரிவு 4A(1) ஆகியவற்றின் கீழ் விசாரித்து வருகிறோம்,” என்று அவர் கூறினார்