மனைவியை கொலை செய்ததாக கணவர் மீது குற்றச்சாட்டு

­காஜாங்: தனது 38 வயது மனைவியைக் கடந்த மாதம் கொன்றதாக ஒரு தொழிலதிபரான கணவர் மீது இன்று மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது. 32 வயதான  முகமட் இம்ரான் முகமட் யூனோஸ், மாஜிஸ்திரேட் சியாருல் சஸ்லி முகமட் சைன் முன் அவருக்கு எதிரான குற்றச்சாட்டு வாசிக்கப்பட்ட பிறகு புரிந்துகொண்டு தலையசைத்தார். ஆனால், இந்த கொலை வழக்கு உயர்நீதிமன்றத்தின் விசாரணையில் உள்ளதால் வாக்குமூலம் எதுவும் பதிவு செய்யப்படவில்லை

குற்றப்பத்திரிகையின்படி, ஜூலை 22 ஆம் தேதி இரவு 8 மணி முதல் 10.30 மணி வரை  Sutera Pines Apartments, Jalan Sutera Pines அடுக்குமாடி குடியிருப்பில் அஸ்வீன் நூர் அலியாஸின் மரணத்தை ஏற்படுத்தியதாக, குற்றவியல் சட்டத்தின் 302 ஆவது பிரிவின் கீழ் அவர்மீது குற்றம் சாட்டப்பட்டது. குற்றம் நிரூபிக்கப்பட்டால் மரண தண்டனையை வழங்கப்படும். வழக்கு தொடர்பான ஆவணங்களை சமர்பிக்க சியாருல் சஸ்லி செப்டம்பர் 13 ஆம் தேதியை நிர்ணயித்தார்.

தாக்கப்பட்டதாக நம்பப்படும் ஒரு பெண், காஜாங்கில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறும்போது இறந்துவிட்டதாக பெர்னாமா முன்பு தெரிவித்தது. உடல் முழுவதும் காயங்களுடன் பெண் சுயநினைவின்றி இருப்பதை உணர்ந்த பின்னர், மருத்துவமனையில் செவிலியர் ஒருவரிடமிருந்து பாதிக்கப்பட்டவரின் மரணம் குறித்து காவல்துறைக்கு அறிக்கை கிடைத்தது. ஜோகூருக்கு தப்பிச் சென்ற குற்றவாளி, செனாயில் பதுங்கியிருந்தபோது, ஜூலை 31ஆம் தேதி போலீசாரால் கைது செய்யப்பட்டார். மேலும், வழக்கு தொடர்பான சில பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here