“Barbie” திரைப்படத்திற்கு லெபனான், குவைத் தடை

 

உலகத் திரையரங்குகளில் சக்கைப்போடு போடும் ‘Barbie’ திரைப்படத்திற்கு லெபனான், குவைத் ஆகிய நாடுகள் தடை விதித்துள்ளது.

குறித்த படம் ஓரினப் புணர்ச்சியை ஆதரிப்பதாகவும் சமய விழுமியங்களுக்கு எதிராக இருப்பதாகவும் லெபனானின் கலாசார அமைச்சர் முகமட் மொர்ட்டாடா (Mohammad Mortada) கூறினார்.

மேலும், “Talk to Me” எனும் திகில் திரைப்படத்தையும் அது தடை செய்துள்ளது.

பொது நன்னெறிக் கோட்பாடுகளையும் சமூகப் பாரம்பரியங்களையும் பாதுகாக்க அந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அந்நாட்டு ஊடக அமைப்பு குறிப்பிட்டது.

மத்திய கிழக்கு நாடுகளில் LGBT சமூகத்தினருக்குப் பாதுகாப்பான சூழல் நிலவிய முதல் அரேபிய நாடான லெபனானில் இப்போது நிலைமை வேறு.

அமைச்சர் மொர்ட்டாடாவுக்கு ஹிஸ்புல்லா (Hezbollah) குழுவின் தலைவர் சையட் ஹசான் நஸ்ரல்லாவின் (Sayyed Hassan Nasrallah) ஆதரவு உள்ளது.

ஆயினும் சென்ற மாதம், ஓரினப் புணர்ச்சியை ஆதரிக்கும் அனைத்தையும் தடைசெய்வது உள்ளிட்ட நடவடிக்கைகளை அரசாங்கம் எடுக்கவேண்டும் என்று திரு. நஸ்ரல்லா கூறியிருந்தார்.

அது லெபனானுக்கு ஆபத்தை ஏற்படுத்துகிறது என்றும் அதனை எதிர்க்கவேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here