இந்தோனேசிய அதிபர் தேர்தல் -தற்காப்பு அமைச்சருக்கு பெருகும் செல்வாக்கு

இந்தோனேசியாவில் நடைபெறவிருக்கும் அதிபர் தேர்தலில் திரு. பிரபோவோ சுபியாந்தோ (Prabowo Subianto) முக்கியமான போட்டியாளராக உருவெடுத்துள்ளார். 

இந்தோனேசியாவின் ஆகப் பழமையான Golkar கட்சியும், இஸ்லாமியச் சார்பு தேசிய ஆணைக் கட்சியும் அவருக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.

பிரபோவோவின் Gerindra கட்சியும் தேசிய எழுச்சிக் கட்சியும் ஏற்கனவே அவரை ஆதரிக்கின்றன. 

அந்த நான்கு அரசியல் கட்சிகளும் இந்தோனேசிய நாடாளுமன்றத்தின் சுமார் 50 விழுக்காட்டு இடங்களைத் தங்கள் வசம் வைத்திருக்கின்றன. 

அதிபர் ஜோக்கோ விடோடோ அமைச்சரவையில் தற்காப்பு அமைச்சராக இருக்கிறார் பிரபோவோ. 

2014, 2019 ஆம் ஆண்டுகளில் நடந்த அதிபர் தேர்தல்களில்  விடோடோவை எதிர்த்துப் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார்   பிரபோவோ. 

இரண்டு தவணைகளைப் பூர்த்தி செய்து விட்டதால் அதிபர் விடோடோ அடுத்த ஆண்டுத் தேர்தலில் போட்டியிட முடியாது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here