மனைவியை விவாகரத்து செய்வதாக கனடிய பிரதமர் அறிவிப்பு

ஒட்டாவா, அகஸ்ட்டு 3:

கனடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவும் அவரது மனைவி சோஃபியும் தங்களது 18 வருட திருமண வாழ்க்கையை முடித்துக்கொள்வதாக நேற்று (அகஸ்ட்டு 2)அறிவித்தனர்.

இருவரும் சமூக ஊடகம் வழி அந்த தகவலை வெளியிட்டனர்.

51 வயதான ட்ரூடோ, 48 வயது சோஃபியை 2005ஆம் ஆண்டு மே மாதம் திருமணம் செய்தார். அவர்களுக்கு 15, 14, 9 வயதுகளில் மூன்று பிள்ளைகள் உள்ளனர்.

அண்மையில் ட்ரூடோவும் சோஃபியும் தங்களது பந்தத்தில் ஏற்பட்டுள்ள விரிசல்கள் பற்றி வெளிப்படையாகப் பேசியிருந்தனர். இந்நிலையில் திருமண முறிவு குறித்து திரு ட்ரூடோ இவ்வாரத்தில் பொது வெளியில் பேசுவார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

சமூக ஊடகங்களில் ட்ரூடோவும் சோஃபியும் மிகவும் பிரபலமானவர்கள். தம்பதியரின் ஆடைகளையும் பேச்சுகளையும் ரசிக்கும் ரசிகர் கூட்டம் அதிககம் உள்ளனர். அவர்களது பிரிவு தங்களுக்கு வருத்தம் தருவதாக இணையவாசிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here