ஜோகூரில் திடீர் வெள்ளம்; 2 குடும்பங்கள் நிவாரண மையங்களுக்கு வெளியேற்றம்

ஜோகூர் பாரு:

ஜாலான் டமாய் 8, கம்போங் செந்தோசா டாமாய் என்ற இடத்தில் நேற்று மாலை 7.15 மணியளவில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சிக்கிய இரண்டு குடும்பங்களை தீயணைப்பு வீரர்கள் பாதுகாப்பாக மீட்டனர்.

பாசீர் கூடாங் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தின் உறுப்பினர்கள் சம்பவம் நடந்த இடத்திற்கு உடனடியாக விரைந்தனர் என்றும் கிராமப் பகுதியைச் சுற்றி 0.91 மீட்டர் உயரத்திற்கு வெள்ளம் இருப்பதைக் கண்டறிந்ததாகவும் பாசீர் கூடாங் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தின் நடவடிக்கை கமாண்டர், மூத்த தீயணைப்பு அதிகாரி II ரம்லி ஏ ஹமிட் கூறினார்.

“அங்கு நான்கு ஆண்கள் மற்றும் ஒரு மூதாட்டி, ஊனமுற்ற நபரான (OKU) ஒரு வயதான பெண் உட்பட பத்துப்பேர் மீட்கப்பட்டனர்.

“இந்த நடவடிக்கையால் பாதிக்கப்பட்ட கம்போங் செந்தோசா கிராமவாசிகள், அவர்களுக்கு சொந்தமான ஃபைபர் வகை படகு மூலம் சூராவ் அல்-முசாக்கிரில் இயங்கிவந்த நிவாரண மையத்திற்கு மாற்றப்பட்டனர்” என்று அவர் நேற்று இரவு வெளியிட்டுள்ள ஒரு ஊடக அறிக்கையில் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here