மாஸ்கோ: நிலவின் தென் துருவத்தில் ஆய்வு செய்யும் வகையில், ரஷ்யாவின் லூனா 25 விண்கலம் கடந்த 11 ஆம் தேதி அதிகாலை விண்ணில் செலுத்தப்பட்டது. இந்த விண்கலம் 5 நாட்களில் நிலவின் சுற்றுவட்டப்பாதைக்கு சென்றது.
நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்வதற்காக இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ, ரூ.615 கோடியில் சந்திரயான்-3 விண்கலத்தை வடிவமைத்துள்ளது. இந்த விண்கலம் எல்விஎம்-3 எம்-4 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள 2ஆம் ஏவுதளத்தில் இருந்து ஜூலை 14ஆம் தேதி மதியம் 2.35 மணியளவில் விண்ணில் ஏவப்பட்டது. சந்திரயான் – 3 வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.
நிலவை நோக்கிய பயணத்தை வெற்றிகரமாக சந்திரயான் -3 விண்கலம் கடந்து கொண்டு இருக்கிறது. தற்போது நிலவின் சுற்றுவட்டப்பாதையில் சுற்றி வரும் சந்திரயான் 3, வரும் ஆகஸ்ட் 23 ஆம் தேதி நிலவின் தென் துருவத்தில் சாப்ட் லேண்டிங் முறையில் தரையிறங்க உள்ளது. இதுவரை எந்த நாடும் நிலவின் தென் துருவத்தில் ஆய்வு செய்தது இல்லை.