சிங்கப்பூரில் இன்று அதிபர் தேர்தல்

சிங்கப்பூர் :

சிங்கப்பூரின் ஒன்பதாவது அதிபரைத் தேர்ந்தெடுக்க இன்று (செப்டம்பர் 1) வாக்களிப்பு நடந்துவருகிறது. இன்று காலை 8 மணி முதல் சிங்கப்பூரர்கள் வாக்களித்து வருகின்றனர்.

இந்நிலையில், சில வாக்களிப்பு நிலையங்களில் காலை நேரத்தில் நீண்ட வரிசையில் மக்கள் காத்திருக்க நேரிட்டதால், பிற்பகலில் வாக்களிக்கச் செல்லுமாறு சிங்கப்பூரர்களுக்கு ஆலோசனை கூறப்பட்டுள்ளது.

“இரவு 8 மணி வரை வாக்களிக்கலாம் என்ப தால், பின்னேரத்தில், குறிப்பாக பிற்பகலில் வாக்களிப்பு நிலையத் திற்குச் செல்லும்படி வாக்காளர் களுக்கு ஆலோசனை கூறப் படுகிறது. பிற்பகலில் வாக்களிப்பதற்கான வரிசை குறைவாக இருப்பது வழக்கம். இதன் தொடர்பில் வாக்காளர்கள் பொறுமையுடன் இருக்கும்படியும் அவர்களின் புரிதலையும் வேண்டுகிறோம்,” என்று தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.

தீவு முழுவதும் அமைந்திருக்கும் பல்வேறு வாக்களிப்பு நிலையங்கள், காலை 8 மணிக்குத் திறக்கப்பட்டன. ஆனால் அதற்கு முன்பாகவே வாக்காளர்கள் நீண்ட வரிசைகளில் காத்திருக்கத் தொடங்கிவிட்டனர்.

ஜூரோங் ஈஸ்ட் ஸ்திரீட் 32ல் உள்ள புளோக் 307இன் கீழ்த்தளத்தில் கிட்டத்தட்ட 100 பேர் வரிசையில் நின்றிருந்தனர். சிராங்கூனில் உள்ள யாங்செங் தொடக்கப் பள்ளியில் காலை 8.10 மணிக்கு 40 முதல் 60 வாக்காளர்கள் வரை வாக்களிக்கக் காத்திருந்ததைக் காண முடிந்தது.

குவோ சுவான் பிரஸ்பெட்டேரியன் உயர்நிலைப் பள்ளியில், காலை 9 மணியளவில் ஏறத்தாழ 200 பேர் வரிசையில் காத்திருந்தனர்.

தோ பாயோ, ஆண்டர்சன் சிராங்கூன் தொடக்கக் கல்லூரி, காத்தோங் சமூக மன்றம், பாசிர் ரிஸ் டிரைவ் 1ல் உள்ள புளோக் 533 போன்ற வாக்களிப்பு நிலையங்களிலும் நீண்ட வரிசைகளில் வாக்காளர்கள் நின்றிருப்பதைக் காண முடிந்தது.

குவோ சுவான் பிரஸ்பெட்டேரியன் உயர்நிலைப் பள்ளி, பாலஸ்தியர் ரோட்டில் உள்ள கல்வி அமைச்சின் தலைமையகம் போன்றவற்றில் வாக்களிப்பு நடைமுறை தாமதமானதாகக் கூறப்பட்டது.

வாக்காளர்கள் சிலர், குறைந்தது 40 நிமிடங்கள் காத்திருக்க நேர்ந்ததாகவும் வாக்காளர் பதிவு முறையில் சிக்கல் இருந்ததாகவும் கூறினர்.

அடையாள அட்டையைச் சரிபார்க்கும் இயந்திரம் அதற்கு வெகு நேரம் எடுத்ததாகவும் அத்தகைய இரண்டு இயந்திரங்கள் மட்டுமே இருந்ததாகவும் காத்தோங் சமூக மன்றத்தில் வாக்களித்த சிலர் கூறினர். இது குறித்த மேல்விவரங்களுக்கு ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ், தேர்தல் துறையை நாடியுள்ளது.

ஜிஐசி முதலீட்டு நிறுவனத்தின் முன்னாள் தலைமை முதலீட்டு அதிகாரி இங் கொக் சொங், முன்னாள் மூத்த அமைச்சர் தர்மன் சண்முகரத்னம், என்டியுசி இன்கம் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி டான் கின் லியான் ஆகியோர் இந்த அதிபர் தேர்தலில் களமிறங்கியுள்ளனர். அவர்களில் ஒருவருக்கு வாக்களிக்க 2,709,407 பேர் தகுதிபெற்றுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here