கிளாந்தானில் இன்று 45 சட்டமன்ற உறுப்பினர்கள் பதவியேற்பு

கோத்தா பாரு:

கோத்தா டாருல்னைமில் நடைபெற்ற 15வது கிளாந்தான் மாநில சட்டமன்றத்தின் முதல் அமர்வின் முதல் கூட்டத்தில் 45 கிளாந்தான் மாநில சட்டமன்ற உறுப்பினர்களும் இன்று பதவிப் பிரமாணம் செய்து கொண்டனர்.

புதிதாக நியமிக்கப்பட்ட சபாநாயகர் டத்தோ முகமட் அமர் நிக் அப்துல்லா முன்னிலையில் கிளாந்தான் மாநில மந்திரி டத்தோ முகமட் நசுருடின் தாவூட் (PAS-Meranti) முதலில் பதவியேற்றார், அதைத் தொடர்ந்து ஒன்பது மாநில செயற்குழு உறுப்பினர்கள் பதவி உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

முன்னதாக, முகமட் நசுருடின் சட்டமன்றத்தின் சபாநாயகராக முகமட் அமரையும்(PAS-Panchor) துணை சபாநாயகராக டத்தோ முகமட் ஃபாரிட் முகமட் ஜவாவியையும் (Bersatu-Kok Lanas) முன்மொழிந்தார், மேலும் அவரது பரிந்துரைகளை டத்தோ டாக்டர் முஹமட் ஃபாட்ஸ்லி ஹாசன் (PAS-Temangan) ஆதரித்தார்.

சமீபத்தில் நடந்து முடிந்த மாநிலத் தேர்தலில், மாநில அரசாங்கத்தை அமைப்பதற்காகப் போட்டியிட்ட 45 இடங்களில் 43 இடங்களில் PAS கட்சியும் மீதி 2 இடங்களை அதன் கூட்டணி கட்சியான பெரிக்காத்தான் நேஷனல் (PN) வெற்றி பெற்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here