இணையத்தில் பாலியல் துன்புறுத்தலுக்குள்ளானவர்கள் காவல்துறையில் புகாரளியுங்கள்

கோலா தெரெங்கானு:

இணையத்தில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானவர்கள் குறிபிட்ட சம்பவங்கள் பற்றி அதிகாரிகளிடம் புகார் செய்ய வலியுறுத்தப்பட்டுள்ளது என்று  பெண்கள், குடும்பம் மற்றும் சமூக மேம்பாட்டு துணை அமைச்சர் ஐமன் அதிரா சாபு கூறினார்.

மேம்பட்ட தகவல் தொடர்பு சாதனங்கள் மற்றும் சமூக ஊடகங்களின் விரைவான வளர்ச்சியின் காரணமாக ஆன்லைன் பாலியல் துன்புறுத்தல் வழக்குகள் அதிகரித்து வருவதாக அவர் கூறினார்.

எனவே, இந்த குற்றங்கள் பரவாமல் தடுக்க பாதிக்கப்பட்டவர்கள் முன் வந்து மலேசிய தகவல் தொடர்பு மற்றும் மல்டிமீடியா கமிஷன் (MCMC) மற்றும் காவல்துறையிடம் புகார் செய்ய வேண்டும் என்று அவர் மேலும் கூறினார்.

“பாலியல் துன்புறுத்தல் என்பது உடல் ரீதியானவற்றுக்கு மட்டும் மட்டுப்படுத்தப்படவில்லை; இது சமூக ஊடகங்களின் செல்வாக்கின் காரணமாக ஆன்லைனிலும் பரவியுள்ளது.

“சமூக ஊடகங்களில் நெட்டிசன் கருத்துக்கள் பாலியல் துன்புறுத்தலின் ஒரு வடிவமாக இருக்கலாம். பாதிக்கப்பட்டவர் அசௌகரியமாக உணர்ந்தால், அவர்கள் அதை MCMC மற்றும் காவல்துறையிடம் புகாரளிக்கலாம்,” என்று அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here