அந்த உண்மையை சொல்லாமல் இருந்திருக்கலாம்! மாரிமுத்துவை நான் கொன்னுட்டேன்!

சென்னை:

பிரபல நடிகரும் இயக்குனருமாக இருந்து வந்த மாரிமுத்து சில தினங் களுக்கு முன்பு மாரடைப்பு காரணமாக காலமானார்.அவர் இறந்து ஒரு வாரம் ஆன நிலையிலும் அந்த அதிர்ச்சியில் இருந்து மீள முடியாத பல ரசிகர்கள் அவரை மிஸ் பண்ணுவதாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.

அது போல அவரோடு நடித்த நடிகர்களும் அவருடைய நண்பர்களும் மாரிமுத்து பற்றி பல தகவல்களை தொடர்ச்சியாக பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில் எதிர்நீச்சல் சீரியலில் நடிகர் மாரிமுத்துவின் மாமனார் அதாவது ஈஸ்வரியின் அப்பாவாக நடிக்கும் விஷ்ணு வாசுதேவ் நடிகர் மாரிமுத்து பற்றி பல தகவல்களை பகிர்ந்து இருக்கிறார்.

அதில் மாரிமுத்து சாரை போன்று ஒரு நபரை பார்க்கவே முடியாது. காரணம் அவர் டிசிப்ளின், பஞ்சுவாலிட்டி என அனைத்திலும் சரியாக இருப்பார். அவர் சரியாக இருப்பதால் என்னை சுற்றி இருப்பவர்களும் சரியாக இருக்க வேண்டும் என்று நினைப்பார். எந்த இடத்திற்கு போனாலும் அங்கு சில பொருட்கள் ஏனோ தானோ என்று இருந்தால் உடனே அதை அவரே சரி செய்து விடுவார். அவர் செய்வதை பார்த்து பக்கத்தில் இருப்பவர்கள் மற்றொரு முறை அலட்சியமாக இருப்பதற்கு யோசிப்பார்கள்.

அதுபோல மனதில் பட்டதையும் வெளிப்படையாக பேசக்கூடியவர். எதிர்நீச்சல் சீரி யலில் அவர் நடித்துக் கொண்டிருக்கும் போது நான் அவருக்கு மாமனாராக நடித்துக் கொண்டிருந்தாலும் நான் செய்வதில் சின்ன சின்ன தவறுகள் எது இருந்தாலும் உடனே சுட்டிக்காட்டி சார் இதை மாற்றி செய்தால் நன்றாக இருக்கும் என்று கூறுவார். அதுவும் நம்முடைய மனம் கோனாத படியே சொல்லுவார். அதேபோல நாம் செய்து முடித்தால் அந்த காட்சிகள் திரையில் அமோகமாக இருக்கும்.

கதைப்படி சில வாரங்களுக்கு முன்புதான் நான் ஜீவானந்தம் என்னுடைய வீட்டிற்கு வந்தது பற்றியும் அவர் ஏற்கனவே ஈஸ்வரியை பொண்ணு கேட்ட விஷயத்தை பற்றியும் சொல்லி இருப்பேன். அப்போ அவர் மனது உடைந்து போய்விடுவார். அந்த நிலையில் அவருடைய புகைப்படங்களும் வீடியோக்களும் இணையத்தில் வைரலாகி வந்தது. அப்போது என்னை அதிகமானோர் திட்டிக் கொண்டிருந்தனர். எங்க தலைவனை சாய்ச்சுட்டாரே இந்த ஆளு என்று கூட பல பேசியிருந்தனர்.

அந்த எபிசோடு வந்த ஒரு சில நாட்களிலே அவருக்கு நிலைமை இப்படி ஆகிவிட்டது என்பது எனக்கு ரொம்பவே வருத்தமாக இருக்கிறது. பலர் இந்த ஆளு உண்மையை சொல்லாமல் இருந்திருந்தால் குணசேகரன் இந்த அளவிற்கு உடைந்து போயிருக்க மாட்டார். மாரிமுத்து சாவதற்கு இவரும் ஒரு காரணம் இவர் உண்மையை சொன்ன பிறகு எபிசோடில் மாரிமுத்து அதிகமாக கத்தி பேசிக் கொண்டிருந்தார் என்றெல் லாம் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

அதே நேரத்தில் மாரிமுத்து இறந்த அன்று 10:30 மணிக்குத்தான் எனக்கு செய்தி வந்தது. அதைக் கேட்டதும் எனக்கு தலையிலே இடி விழுந்த மாதிரி இருந்தது. என் னால் நம்பவே முடியவில்லை. நான் இது பொய்யாக இருந்திடக்கூடாதா என்று தான் நினைத்து ஒவ்வொருத்தருக்காக பேசினேன். அவர்கள் எல்லாம் உண்மைதான் ஹாஸ்பிடலில் தான் இருக்கோம் என்று சொன்ன பிறகு என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை, என்று உருக்கமாக கண்கலங்கியபடி அந்த பேட்டியில் நடிகர் விஷ்ணு வாசுதேவ் பேசியிருக்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here