ஜார்ஜ்டவுன்:
இன்று அதிகாலை ஆயிர் ஈத்தாம், கம்போங் பிசாங்கில் உள்ள இரண்டு வீடுகளில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி மாற்றுத்திறனாளி ஒருவர் (OKU) பரிதாபமாக உயிரிழந்தார்.
பாதிக்கப்பட்ட யோவ் ஹாக் சுவான் (63) என்பவரின் உடல், தீப்பிடித்த வீட்டிலுள்ள அறை ஒன்றில் படுக்கையின் அடிப்பகுதியில் கண்டெடுக்கப்பட்டது என்று பாயா தெருபோங் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தின் தலைவர் முகமட் ஷாகிர் அப்துல்லா கூறினார்.
குறித்த சம்பவம் தொடர்பில் அதிகாலை 3.44 மணிக்கு அழைப்பு வந்தது என்றும் உடனே தமது பாயா தெருபோங் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தின் மீட்புக் குழுவினர், சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
“இடத்திற்கு வந்தபோது, தீ விபத்தில் இரண்டு கிராம வீடுகள் 90 சதவீதம் வரை அழிக்கப்பட்டன.
அதிகாலை 4.28 மணியளவில் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. அதனைத் தொடர்ந்து மீட்புக் குழுவினர் பாதிக்கப்பட்டவரின் உடலை கண்டெடுத்தனர்.
“பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவரின் வலது பக்கம் செயலிழந்ததால், அவரால் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள முடியவில்லை என நம்பப்படுகிறது.
தீ விபத்துக்கான காரணம் மாறும் இழப்பீடு என்பன இன்னமும் விசாரணையில் உள்ளது என்றார் அவர்.




















