கோலாக்கிராயில் உள்ள ஒரு ஆரம்பப் பள்ளியில் பகடிவதை -போலீஸ் விசாரணை ஆரம்பம்

கோலக் கிராய்:

மீபத்தில், கோலக் கிராயில் உள்ள ஒரு தொடக்கப் பள்ளியில் நடந்ததாக நம்பப்படும் பகிடிவதை சம்பவத்தைக் காட்டும் ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானதைத் தொடர்ந்து, அது தொடர்பில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

நேற்று காலை 10.55 மணியளவில் இந்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்டவரின் தந்தையிடம் இருந்து புகார் வந்ததாக கோலக் கிராய் மாவட்ட காவல்துறை தலைவர் சுசைமி முகமட் தெரிவித்தார்.

முதற்கட்ட விசாரணையின் விளைவாக, கடந்த செப்டம்பர் 14ஆம் தேதி மதியம் 12.10 மணியளவில், பாதிக்கப்பட்டவர் தனது வகுப்பறைக்கு வெளியே இருந்தபோது, ​​அவரைத் தாக்கியதாகக் கருதப்படும் மேலும் இரண்டு மாணவர்கள் அவரை அணுகியதாக அவர் கூறினார்.

“பாதிக்கப்பட்டவரின் மருத்துவப் பரிசோதனையின் முடிவில், பாதிக்கப்பட்டவரின் உடலில் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை என்று கண்டறியப்பட்டுள்ளது,” என்று அவர் இன்று வெளியிட்டுள்ள ஓர் ஊடக அறிக்கையில் தெரிவித்தார்.

சந்தேகநபர்கள் இருவரும் 11 வயது பள்ளி மாணவர்கள் என்று சுசைமி கூறினார்.

“இந்த சம்பவத்தில் தொடர்புடைய அனைத்து மாணவர்களும் மேலதிக விசாரணைக்காக வாக்குமூலம் பெற கோலக் கிராய் மாவட்ட காவல்துறை தலைமையகத்திற்கு அழைக்கப்படுவார்கள் என்றார்.

“இந்த வழக்கு குற்றவியல் சட்டம் பிரிவு 323 இன் கீழ் விசாரிக்கப்பட்டு வருகிறது,அதே நேரத்தில், இந்த சம்பவம் பள்ளிக்கும் தெரிவிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது,” என்று அவர் கூறினார்.

மேலும், காவல்துறை விசாரணையில் குழப்பம் ஏற்படுவதைத் தவிர்க்கவும், இந்தச் சம்பவம் தொடர்பாக எந்தவித ஊகங்களையும் வெளியிட வேண்டாம் என்றும் அவர் பொதுமக்களுக்கு அறிவுறுத்தினார்.

முன்னதாக, 14 வினாடிகள் கொண்ட வீடியோ ஃபேஸ்புக் மற்றும் டுவிட்டரில் வைரலானது, பள்ளி கட்டிடத்தின் பின்னால் இரண்டு ஆண் மாணவர்கள் மற்றொரு மாணவனைக் கொடுமைப்படுத்துவதைக் காட்டுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here