ரவூப்:
நேற்று இரவு ரவூப் நகரில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தால் எட்டு குடும்பங்களைச் சேர்ந்த 10 பேர் தற்காலிக நிவாரண மையத்திற்கு மாற்றப்பட்டனர்.
அங்கு தொடர்ந்து இரண்டு மணி நேரம் பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக வாய்க்காலில் தண்ணீர் தேங்கி பெருக்கெடுத்து ஓடுவதாக ரவூப் மாவட்ட பேரிடர் மேலாண்மைக் குழு செயலகம் தெரிவித்துள்ளது.




















