65,000 லிட்டர் கடத்தல் பீர் பறிமுதல்; நெகிரி செம்பிலான் சுங்கத் துறை அதிரடி

சிரம்பான்:

டந்த செப்டம்பர் 8 அன்று, மலேசிய சுங்கத் துறையின் (JKDM) நெகிரி செம்பிலான் மாநில குழுவினர் நடத்திய சோதனையில் RM362,843 மில்லியன் மதிப்புள்ள 65,000 லிட்டர் கடத்தல் பீர் பறிமுதல் செய்யப்பட்டது.

பொதுமக்களின் ரகசிய தகவல் மற்றும் உளவுத்துறைக்கு கிடைத்த தகவலின் பேரில்,நண்பகல் 12.30 மணியளவில் கோலாலம்பூர், ஜாலான் பூச்சோங்கில் உள்ள பழைய கிடங்கில் சோதனை நடத்தப்பட்டது என்று மாநில சுங்கத்துறை இயக்குனர் முகமது ஹபீஸ் இஷாக் கூறினார்,

பீர் கேன்களில் காலாவதி தேதியை அச்சிட பயன்படுத்தப்பட்ட ஹிட்டாச்சி இன்க்ஜெட் பிரிண்டரையும் அமலாக்கக் குழு கைப்பற்றியதாக அவர் கூறினார்.

மேலும், கைப்பற்றப்பட்ட பீர் கேன்களுக்கு காலாவதி தேதி இல்லை என்பதையும், கிடங்கில் உள்ள அச்சு இயந்திரத்தைப் பயன்படுத்தி ஒவ்வொரு கேனின் பின்புறத்திலும் சிண்டிகேட் காலாவதி தேதியை அச்சிட்டதையும் நாங்கள் கண்டறிந்தோம், ”என்று அவர்நேற்று நடந்த செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

ஆசிய மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மதுபானங்களை மலிவு விலையில் உள்ளூர் சந்தையில் விநியோகம் செய்யவதற்கோ அல்லது விற்பதற்கோ முன்னர் அதிகாரிகளையும் பொதுமக்களையும் குழப்புவதற்காக காலாவதி தேதியை அச்சிடுவதே சிண்டிகேட்டின் செயல்பாடாகும் என்று முகமட் ஹபீஸ் கூறினார்.

இதவரை இச்சம்பவம் தொடர்பில் யாரும் கைது செய்யப்படவில்லை, ஆனால் இந்தக்கும்பலின் மூளையாக செயல்பட்டவரை அதிகாரிகள் அடையாளம் கண்டுள்ளனர் என்றார் அவர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here