கோலாலம்பூர்:
ம.இ.கா – மலேசிய மக்கள் சக்தி கட்சி இணைந்து செயல்ப்படவுள்ள நிலையில் எங் களின் செயல்பாடுகளை ஒருங்கிணைக்க சிறப்பு செயலகம் ஒன்று அமைக்கப் படவுள்ளதாக ம.இ.கா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன் அறிவித்தார்.
மலேசிய மக்கள் சக்தி கட்சி மத்திய செயலவையும் ம.இ.கா முண்ணனி தலைவர்க ளும் சந்திப்பு நடத்தினர். இந்த சந்திப்பில் மலேசிய மக்கள் சக்தி கட்சி தலைவர் டத்தோஸ்ரீ ஆர்.எஸ்.தனேந்திரன், ம.இ.காவை பிரதிநிதித்து விக்னேஸ்வரனோடு கட்சி துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம்.சரவணன், உதவித் தலைவர்கள் டத்தோ தி.மோகன், தலைமைச் செயலாளர் டத்தோ ராஜசேகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
சந்திப்பிற்கு பிறகு விக்னேஸ்வரனும் தனேந்திரனும் செய்தியாளர்களை சந்தித்தனர். அதில் பேசிய விக்னேஸ்வரன், ம.இ.காவும் மலேசிய மக்கள் சக்தி கட்சியும் இணைந்து செயல்பட முடிவெடுத்துள்ளோம். இந்தியர்களின் நலன் கருதி இந்து முடிவை நாங்கள் எடுத்துள்ளோம். இணைந்து செயல்ப்பட்டால் இன்னும் ஆக்கப்பூர்வமான அடைவு நிலைகளை பெறலாம்.
அது மட்டுமன்றி நாட்டில் உள்ள இந்திய கட்சிகள் அனைத்தையும் ஒன்றிணைக்கும் நடவடிக்கையாகவும் இந்த சிறப்பு செயலகம் இருக்கலாம். இந்த செயலகம் தோற்றுவிப்பு தொடர்பிலான மேல்விவரங்கள் கூடிய விரைவில் அறிவிக்கப்படும்.
இப்போதைக்கு ம.இ.காவும் மக்கள் சக்தி கட்சியும் இந்த செயலகத்தில் இயங்குவோம். ஒருவேளை மற்ற இந்திய கட்சிகள் இதில் இணைய விரும்பினால் அவர்களும் தாராள மாக வரலாம். அதே சமயம் மக்கள் சக்தி கட்சியை தவிர வேறு எந்த தரப்பினருக் கும் நானாக சென்று அழைப்பு விடுக்கவில்லை எனவும் விக்னேஸ்வரன் குறிப்பிட்டார்.
இதனிடையே இந்த செயலகம் எங்கே, எப்பொழுது அமைக்கப்படும் உள்ளிட்ட பொறுப்புகளை ம.இ.காவிடமே விட்டு விடுகின்றோம் என தனேந்திரன் கூறினார். இனி இணைந்து செயல்ப்பட இரு கட்சிகளான நாங்கள் முடிவெடுத்துள்ளோம். நாட் டில் சிறிய எண்ணிக்கையில் உள்ள நாம் ( இந்தியர்கள்) ஒற்றுமையாக செயல்ப்பட்டு அனைத்து சவால்களையும் லாவகரமாக எதிர்கொள்ள வேண்டும்.
இந்தியர்கள் அனைவரும் ஒற்றுமையாக செயல்பட்டால் நமக்கான முன்னேற்ற வாய்ப் புகள் அனைத்தையும் தவற விட தேவையில்லை எனவும் தனேந்திரன் நினைவூட்டி னார்.