‘நான் செய்தியாளர் திரட்டேடு போட்டி’

தாப்பா, செப். 29-

பத்தாங் பாடாங் முவாலிம் மாவட்ட தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர் கழகம் மக்கள் ஓசையுடன் இணைந்து நடத்திய மாவட்ட  தமிழ்ப்பள்ளிகளுக்கு இடையிலான நான் செய்தியாளர் திரட்டேடு போட்டி (Scrapbook Competition) வெற்றிகரமாக நடைபெற்று முடிந்தது. வியக்கும் வகையில் மாணவர்களின் புத்தக தயாரிப்புகள் இருந்தன. வெற்றியாளர்கள் நிலவரம் அண்மையில் அறிவிக்கப்பட்டுவிட்ட நிலையில்,  அவர்களுக்கான பரிசளிப்பு விழா நடத்தப்பட்டு அதில் பரிசுத்தொகை மற்றும் சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்படுவர்.

பள்ளிகளுக்கான இரண்டு பிரிவிலும் சிலிம் ரிவர் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் முதல் நிலையை வெற்றிகொண்டனர். 3 ஆம் ஆண்டு வரை முதல் பிரிவில் 25 வெற்றியாளர்கள், 4 முதல்  6 ஆம் ஆண்டு வரை இரண்டாம் பிரிவில் 25 வெற்றியாளர்கள். பொதுப்பிரிவில் 15 வெற்றியாளர்கள் மற்றும் சிறந்த பங்களிப்பு செய்த வகையில் 3 வெற்றிபெற்ற பெரிய பள்ளிகள், 3 வெற்றிபெற்ற சிறிய பள்ளிகள் என வெற்றிப்பட்டியலில் இடம்பிடித்திருந்தனர்.

இவர்களுக்கான பரிசளிப்பு விழாவை எஸ்.ஒ.பி விதிமுறைகளுக்கு உட்பட்டு மிக விரைவில் நடத்துவதற்கு மக்கள் ஓசை நிர்வாகம் திட்டம் கொண்டுள்ளது. அத்துடன் போட்டியில் பங்குபெற்ற 19 தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர்களும் நிகழ்ச்சிக்கு அழைக்கப்பட்டு சான்றிதல் வழங்கப்படுவர். போட்டியில் பங்குபெற்ற இதர மாணவர்களின் பரிசுகளும் சான்றிதழ்களும் தத்தம் தலைமையாசிரியர்களிடம் ஒப்படைக்கப்படும்.   இதன் விவரம் பத்தாங் பாடாங் முவாலிம் மாவட்ட தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர் கழகத்தின் வாயிலாக விரைவில்  சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கும் மாணவர்களுக்கும் அறிவிக்கப்படும் என மக்கள் ஓசை இயக்குனர் டத்தோ எஸ். கோபாலகிருஷ்ணன் தெரிவித்தார்.      தாப்பாலிருந்து தஞ்சோங் மாலிம் வரையில் மாவட்டத்தின் 19   தமிழ்ப்பள்ளிகளிலிருந்து 271  மாணவர்கள் கலந்து மாணவர்கள் தங்களின் திறமைகளை வெளிப்படுத்தியிருந்தனர்.

மக்கள் ஓசை சிறந்த முறையில் தேர்வினை நடத்தியுள்ளது. அதன் தீர்ப்புகள் நியாயமான முறையிலும் உள்ளது என கழகத்தின் தலைவர், தலைமையாசிரியர் பழனி சுப்பையா தெரிவித்தார். பொதுவாக 3 அல்லது 5 வெற்றியாளர்கள் என அறிவிக்கப்பட்டு பரிசு வழங்குவது வழக்கமாக இருந்திருக்கிறது. ஆனால், மக்கள் ஓசை மாணவர்களின் ஒவ்வொரு பிரிவிலும் 25 வெற்றியாளர்கள் என அறிவிப்பு செய்து இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இது, பள்ளிகளுக்கு மட்டுமின்றி ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் என அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.

இந்நிலையில் முதல் நிலை வெற்றியாளர்களான நித்யாஷினி பாலசுப்ரமணியம், சிலிம் ரிவர் தமிழ்ப்பள்ளி (முதல் பிரிவு), உநிதாஸ்ரீ குணாளன், சிலிம் ரிவர் தமிழ்ப்பள்ளி (இரண்டாம் பிரிவு), புஷ்பவள்ளி நாராயணசாமி (பொதுப்பிரிவு) ஆகியோர் ஒருவருக்கு தலா ரி.ம 3௦௦.௦௦ பரிசுத்தொகையுடன் சான்றிதழும் பெறுவர்.

இரண்டாம் நிலை வெற்றியாளர்கள் பிரேந்தாசனா ஹேம குமார்,  பநோப்டேன் தோட்டத் தமிழ்ப்பள்ளி (முதல் பிரிவு), ஜீவாவிக்னேஷ் தியாரன், பீடோர் தாஹான் தோட்டத் தமிழ்ப்பள்ளி (இரண்டாம் பிரிவு), யோகபாவனா சுகுமாரன் (பொதுப்பிரிவு) ஆகியோர் ஒருவருக்கு தலா ரி.ம 25௦.௦௦ பரிசுத்தொகையுடன் சான்றிதழும்  பெறுவர்.

மூன்றாம் நிலை வெற்றியாளர்கள் மகேஷ்வர் தனசேகர், பீடோர் துன் சன்பந்தன் தமிழ்ப்பள்ளி (முதல் பிரிவு), திவாதினி துரைசாமி, தாப்பா தமிழ்ப்பள்ளி (இரண்டாம் பிரிவு), சரஸ்வதி ராமையா (பொதுப்பிரிவு) ஆகியோர் ஒருவருக்கு தலா ரி.ம 2௦௦.௦௦ பரிசுத்தொகையுடன் சான்றிதழும் பெறுவர்.

நான்காம் நிலை வெற்றியாளர்களான டாக்ஷாயணி மணிவண்ணன், தஞ்சோங் மாலிம் டான்ஸ்ரீ டத்தோ மாணிக்கவாசகம் தமிழ்ப்பள்ளி (முதல் பிரிவு), புவனேஸ்வர் சுப்ரமணியம், செண்டேரியாங் பாரதி தமிழ்ப்பள்ளி (இரண்டாம் பிரிவு), வசந்தமலர் பாலகிருஷ்ணன் (பொதுப்பிரிவு) ஆகியோர் ஒருவருக்கு தலா ரி.ம 15௦.௦௦ பரிசுத்தொகையுடன் சான்றிதழும் பெறுவர்.

ஐந்தாம் நிலை வெற்றியாளர்கள் லோகேஸ்வரான் ரஞ்ஜிட் குமார், பீடோர் துன் சன்பந்தன் தமிழ்ப்பள்ளி (முதல் பிரிவு), தனுஷ்கா ராஜேந்திரன், தாப்பா ரோடு கீர் ஜோஹாரி தமிழ்ப்பள்ளி (இரண்டாம் பிரிவு) நர்ஷ் ராமன் (பொதுப்பிரிவு) ஆகியோர் ஒருவருக்கு தலா ரி.ம 1௦௦.௦௦ பரிசுத்தொகையுடன் சான்றிதழும் பெறுவர்.

இதர வெற்றியாளர்கள் ஒருவருக்கு தலா ரி.ம 5௦.௦௦ பரிசுத் தொகையுடன் சான்றிதழும் பெறுவர். அதனைத் தவிர்த்து, போட்டியில் கலந்துகொண்ட அனைத்து மாணவர்களுக்கும் சான்றிதழுடன் நினைவுப்பரிசும் வழங்கப்படும் (நிகழ்ச்சியில் ஆசிரியர்களிடம் ஒப்படைக்கப்படும்).   அத்துடன் பள்ளி நிலையில் வெற்றிபெற்ற 6 பள்ளிகளுக்கு (பெரிய பள்ளி 3 & சிறிய பள்ளி 3) சான்றிதழுடன் பரிசும் நிகழ்ச்சியில் வழங்கப்படும்.

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here