2 மில்லியனுக்கும் அதிகமான சட்டவிரோத சிகரெட்டுகள் சுங்கத்துறையால் கைப்பற்றப்பட்டன

ஜோகூர்:

ட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்ட 2 மில்லியனுக்கும் அதிகமான சிகரெட்டுக்களை சுங்கத்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.

கடந்த செப்டம்பர் 12 அன்று ஜெரான்டுட் , பஹாங் மாராங் மற்றும் திரெங்கானு ஆகிய இடங்களில் இருந்தா மூன்று வீடுகளில் சோதனை நடத்தியபோது 2.08 மில்லியனுக்கும் அதிகமான வெள்ளை சிகரெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன.

“இவற்றின் வரி மதிப்பு சுமார் RM625,000 என்று, ஜோகூர் சுங்கத் தலைமையகத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 24) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் சுங்கத் துறை துணை இயக்குநர் ஜெனரல் (அமலாக்கம் மற்றும் இணக்கம்) டத்தோ சசாலி முகமட் கூறினார்.

பொதுமக்களிடம் இருந்து கிடைத்த தகவலின் பேரில், இரண்டு வாரங்களாக உளவுத் தகவல்களின் அடிப்படையில் க இந்த சோதனை நடத்தப்பட்டது என்றும், பதுக்கி வைக்கப்பட்டிருந்த சிகரெட்டுகளின் பல்வேறு பிராண்டுகளின் அடிப்படையில், இந்தோனேசியா, தாய்லாந்து மற்றும் வியட்நாமில் இருந்து கொண்டு வரப்பட்டவை என்று நாங்கள் நம்புகிறோம் என்றும் அவர் மேலும் கூறினார்.

சுங்கச் சட்டம் 1967 இன் பிரிவு 135(1)(d) இன் கீழ் விசாரணைகள் நடந்து வருவதாகவும் அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here