தவறு செய்யும் கீழ்நிலை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் – அயோப் கான்

கோலாலம்பூர்:

வறு செய்யும் கீழ்நிலை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் அதே நேரத்தில் அனைத்து காவல்துறை அதிகாரிகளும், பொறுப்பில் உள்ள பணியாளர்களும் தங்கள் கடமைகளை நிறைவேற்றும் போது கடுமையாகவும் தைரியமாகவும் இருக்க வேண்டும் என்றும் டத்தோஸ்ரீ அயோப் கான் மைடின் பிச்சை தெரிவித்தார்.

மேலும் பொறுப்பிலுள்ள அதிகாரிகள் தமக்கு கீழ் பணிபுரிபவர்களை உன்னிப் பாகக் கண்காணிக்க வேண்டும் என்று தேசிய காவல்துறை துணை தலைவருமான அவர் கூறினார்.

“காவல்துறை சம்பந்தப்பட்ட தவறான வழக்குகள் அதிகரித்து வருகின்றன,” என்று கூறிய அவர், இதற்கு காரணம் “உரிய நடவடிக்கை இல்லாதது மட்டுமல்ல, சிலர் கண்டிக்கப்படவில்லை” என்று அவர் கூறினார்.

அனைத்து இயக்குநர்கள், காவல்துறை ஆணையர்கள், கமாண்டன்ட்கள், மாநில காவல்துறைத் தலைவர்கள், துறைத் தலைவர்கள் மற்றும் மாவட்டங்களுக்குப் பொறுப்பான காவல்துறை அதிகாரிகள் என அனைவரும் விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளைச் செயல்படுத்த கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அயோப் கான் கூறினார்.

“தவறான அல்லது ஒழுங்குப் பிரச்சினைகளில் ஈடுபட்டுள்ள பணியாளர்களுக்கு எதிராக தேவையான நடவடிக்கை எடுக்கத் தவறும் எந்தவொரு உயர் அதிகாரி மீதும் நாங்கள் நடவடிக்கை எடுப்போம்” என்று அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here