தேர்தலில் யார்  போட்டியிட வேண்டும் என்பதை எம்.ஏ.சி.சி. முடிவு செய்யாது

காஜாங்,

தேர்தலில் யார் போட்டியிட வேண்டும் என்பதை எம்.ஏ.சி.சி.எனப்படும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் முடிவு செய்யாது என அதன் தலைமை ஆணையர் டான்ஸ்ரீ அஸாம் பாக்கி கூறினார். மாறாக, இவ்விவகாரத்தை தேர்தல் ஆணையமே முடிவு செய்யும் என அவர் சொன்னார்.

தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ஊழலில் ஈடுபட்டிருந்தாரா, இல்லையா என்பதை முடிவு செய்ய வேண்டியது தேர்தல் ஆணையமே. மாறாக, மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் அல்ல எனவும் அவர் சொன்னார். யார் தேர்த லில் போட்டியிடுவது போன்ற விவகாரங்களில் எம்.ஏ.சி.சி. ஒருபோதும் தலையிடாது. மாறாக, அங்கு ஊழல் ஏதும் நிகழுமாயின் அதுகுறித்தே மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் விசா ரணை செய்யும் என்றார்.

ஊழல் விவகாரத்தில் சம்பந்தப்பட்ட தனிநபர் ஒருவர் மீண்டும் தேர்தலில் போட்டியிட முடியுமா என்பதை தேர்தல் ஆணையமே முடிவு செய்ய வேண்டும் எனவும் அவர் சொன்னார்.

தேர்தல் நேரத்தில் யாராவது ஊழலில் ஈடுபட்டிருந்தால் அதுகுறித்து 1954ஆம் ஆண்டு தேர்தல் சட்டம் உட்பட மலேசிய ஊழல் தடுப்பு ஆணையச் சட்டத்தின் கீழ் விசாரணை செய்யும் பணியை மட்டுமே எம்.ஏ.சி.சி. மேற்கொள்ளும் என நேற்று நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.

நேற்று மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் 56ஆவது கொண்டாட்டத் தினத்தை முன்னிட்டு மலேசிய சிறைச்சாலை கல்லூரியில் ஊடகவியலாளர்களுடன் நடை பெற்ற துப்பாக்கிச் சுடும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர் அவர் செய்தியாளர் களிடம் இவ்வாறு தெரிவித்தார்.

ஊழல் விவகாரத்தில் சிக்கிய தனிநபர் ஒருவர் எப்படி தேர்தலில் போட்டியிட முடியும் என அம்னோ உச்சமன்ற உறுப்பினர் டத்தோ முகமட் ஃபுவாட் ஸர்காஷி கேள்வி எழுப்பியிருந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here