கோலாலம்பூர்:
மனிதவள அமைச்சில் ஐந்து அதிகாரிகள் ஊழலில் ஈடுபட்ட விவகாரம் உட்பட கெடா மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ முகம்மட் சனுசி முகமட் நோரின் விசாரணை அறிக்கை சட்டத்துறை தலைவரிடம் ஒப்படைக்கப்பட்டு விட்டது. அடுத்தக் கட்ட நடவடிக்கை என்ன என்பதை தெரிந்து கொள்ள சட்டத்துறை தலைவரின் முடிவுக்காக தாங்கள் காத்துக் கொண்டிருப்பதாக மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமை ஆணையர் டான்ஸ்ரீ அஸாம் பாக்கி கூறினார்.
அந்நிய நாட்டுத் தொழிலாளர்களை வேலைக்கு சேர்ப்பதில் ஊழல் நிகழ்ந்துள்ள விவகாரம் மீதான விசாரணை அறிக்கை கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு சட்டத்துறை தலைவரிடம் ஒப்படைக்கப்பட்டு விட்டது.
எனினும், அவரின் முடிவுக்காக தாங்கள் காத்திருப்பதாக நேற்று மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் 56ஆவது கொண் டாட்டத் தினத்தை முன்னிட்டு மலேசிய சிறைச்சாலை கல்லூரியில் ஊடகவியலா ளர் களுடன் நடைபெற்ற துப்பாக்கிச் சுடும் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பின்னர் அவர் செய்தியாளர்களிடம் இவ்வாறு தெரி வித்தார். கெடாவில் REE எனப்படும் நாடிர் பூமி திட்டத்தில் ஊழலில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் கெடா மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ முகம்மட் சனுசி முகமட் நோரின் விசாரணை அறிக்கை சட்டத் துறை தலைவரிடம் ஒப்படைக்கப்பட்டு விட்டது.
இவ்விவகாரத்திற்கு சட்டத்துறை தலைவர் இன்னும் இரண்டு, மூன்று வாரங்களில் முடிவெடுப்பார் எனவும் எதிபார்க்கப்படுவதாக அவர் சொன்னார்.
மனிதவள அமைச்சு மேற்கொண்ட அந்நிய நாட்டுத் தொழிலாளர்களை வேலைக்குச் சேர்க்கும் நடவடிக்கையில் ஊழல் ஏற்பட்டது தொடர்பாக அமைச்சிலுள்ள 5 அதிகாரிகள் பணி நீக்கம் செய்யப்பட்ட வேளையில், மற்றொருவர் பொதுச் சேவைத்துறையின் வேறொரு இலாகாவுக்கு பணி மாற்றம் செய்யப்பட்டதாக கடந்த மே மாதம் ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
மேற்குறிப்பிட்ட ஆறு அதிகாரிகளும் மனிதவள அமைச்சர் வ. சிவகுமாரால் பணியில் அமர்த்தப்பட்டவர்கள். அவர்கள் அனைவரும் பணியிலிருந்து நீக்கப்பட்டதை அவர் உறுதிப்படுத்தியிருந்தார். மனிதவள அமைச்சின் பணிகள் சீரான முறையில் நடை பெறுவதை உறுதிப்படுத் துவதற்காகவே இந்நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் அவர் கூறியிருந்தார்.
கெடா மாநிலத்திலுள்ள REE திட்டத்தில் ஊழல் நடவடிக்கையில் ஈடுபட்டதாக அம்மாநில மந்திரி பெசார் கழகத்தைச் சேர்ந்த மூத்த அதிகாரி ஒருவரும் அந்நிறுவனத்தின் இயக் குநர் ஒருவரும் கடந்த ஜூன் மாதம் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தால் கைது செய்யப்பட்டனர். அவர்கள் ஒரு கோடியே 30 லட்சம் ரிங்கிட் ஊழலில் சம்பந்தப்பட் டதோடு அதிகார துஷ்பிரயோகம் செய்ததற்காகவும் கைது செய்யப்பட்டனர்.





















