நாட்டின் 9 மாநிலங்களை உள்ளடக்கிய 16 பகுதிகளில் ஆரோக்கியமற்ற காற்று மாசுக் குறியீடு பதிவு

கோலாலம்பூர்:

ன்று (அக் 2) காலை 9 மணி நிலவரப்படி, நாட்டின் ஒன்பது மாநிலங்களை உள்ளடக்கிய 16 இடங்களில் ஆரோக்கியமற்ற காற்று மாசுக் குறியீடு (API) பதிவாகியுள்ளது.

மலேசிய காற்று மாசுபாடு குறியீட்டு மேலாண்மை அமைப்பின் (APIMS) இணையதளத்தின் அடிப்படையில், தலைநகரின் செராஸில் அதிகபட்சமாக காற்று மாசுக் குறியீடு 164 ஆகப் பதிபதிவாகியது , அதைத் தொடர்ந்து நெகிரி செம்பிலானின் நீலாய் மற்றும் சிரம்பான் ஆகிய இடங்கள் முறையே 163 மற்றும் 158 ஆகிய அளவீடுகளை பதிவு செய்தது.

மேலும், புத்ராஜெயாவில் காற்று மாசுக் குறியீடு 156-ஆகவும், சிலாங்கூரின் பெட்டாலிங் ஜெயா, ஷா ஆலம் மற்றும் பந்திங்கில் 157-ஆகவும் பதிவாகியுள்ளது.

மலாக்காவில் புக்கிட் ரம்பாய், கோலாலம்பூரில் பத்து மூடா மற்றும் ஜொகூர் ஜோஹன் செத்தியாவில் காற்று மாசுக் குறியீடு 153-ஆக பதிவாகியுள்ளது

இதற்கிடையில், நாடு முழுவதும் உள்ள 45 APIMS நிலையங்கள் சராசரி IPU அளவீடுகளைப் பதிவு செய்ததுடன் 7 நிலையங்கள் நல்ல காற்றின் தரத்தினை பதிவுசெய்தன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here