பொந்தியானில் போதைப்பித்தர்கள் 21 பேர் கைது

பொந்தியான்:

நேற்று போதைப்பொருள் பாவனைக்கு எதிரான மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில் 21 போதைப்பித்தர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

போதைப்பித்தர்களின் கூடாரங்கள் என நம்பப்பபடும் 12 இடங்கள் மற்றும் அவர்களின் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது என்று, பொந்தியான் மாவட்ட காவல்துறைத் தலைவர், கண்காணிப்பாளர் முகமட் ஷோபி தாயிப் கூறினார்.

“கைது செய்யப்பட்டவர்கள் 19 வயது முதல் 55 வயதுடையவர்கள் என்றும் அவர்களில் பலர் இதற்கு முன் போதைப்பொருளில் இருந்து மறுவாழ்வு பெற்ற உள்ளூர்வாசிகள்” என்று அவர் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

ஆபத்தான போதைப்பொருள் சட்டம் (ADB) 1952 மற்றும் போதைக்கு அடிமையானவர்கள் சட்டம் 1983 இன் கீழ் பல்வேறு குற்றங்களுக்காக அவர்கள் கைது செய்யப்பட்டதாக முகமட் ஷோபி கூறினார்.

மேலும் கைதுசெய்யப்பட்டவரிடமிருந்து 0.69 கிராம் எடையுள்ள ஹெராயின் போதைப்பொருளையும் சட்ட அமலாக்க அதிகாரிகள் கைப்பற்றினர்.

கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்கள் அனைவரும் மேலதிக விசாரணைக்காக பொந்தியான் காவல்துறை தலைமையகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

போதைப் பழக்கத்தைத் தடுப்ப்பதற்கு பொந்தியான் மாவட்ட காவல்துறையின் Facebook Messenger அல்லது WhatsApp 011-27987474 மூலம் தகவல்களை தந்துதவுமாறு பொதுக்களுக்கு முகமட் ஷோபி அழைப்பு விடுத்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here