கண்முன்னே களவாடப்பட்ட மோட்டார் சைக்கிள் : செய்வதறியாது நின்ற முதியவர்

கோலாலம்பூர்:

மீபத்தில் சிலாங்கூர், பந்திங் அருகேயுள்ள ஒரு கிளினிக்குக்கு அருகிலுள்ள மோட்டார் சைக்கிள் நிறுத்துமிடத்தில், தன் கண் முன்னே அவரது மோட்டார் சைக்கிள் திருட்டுப்போவதைக் கண்டு முதியவர் ஓர் செய்வதறியாது திகைத்து நிற்கும் காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

@nanmanjoi8715 என்ற பயனரால் X தளத்தில் வெளியிடப்பட்ட இரண்டு நிமிடம் மற்றும் 14 வினாடி கொண்ட CCTV காணொளி மூலம் இந்த விஷயம் வெளிச்சத்திற்கு வந்தது.

குறித்த முதியவர் அந்தப் பகுதியை விட்டுச் செல்லத் தயாராகிக் கொண்டிருந்தபோது, அடையாளம் தெரியாத ஒரு நபர் அவரை அணுகினார், பின்னர் அவர் ஏதோ பேசுவது போலவும், இன்னார் முதியவரின் ஹெல்மெட்டைக் கழற்றிக் கொண்டு, முதியவரின் மோட்டார் சைக்கிளில் அவர் புறப்பட்டார்.

அந்த ஆடவர் மோட்டார் சைக்கிளை எடுத்துச் செல்லும்போது, குறித்த முதியவர் உதவியற்ற நிலையில் நிற்பதைக் காணமுடிந்தது.

இந்த வீடியோ X இல் 40,000 பார்வைகளைப் பெற்றுள்ளது. மேலும் இந்த சம்பவத்தால் அதிர்ச்சியடைந்த நெட்டிசன்கள், அந்த மூத்த குடிமகன் பரிதாபப்பட்டு பல கருத்துக்களை தெரிவித்து வருகினறனர்.

இந்நிலையில் பாதிக்கப்பட்ட 65 வயதுடைய நபர் போலீசில் முறைப்பாடு செய்ததை அடுத்து சந்தேக நபரை போலீசார்ர் கைது செய்துள்ளனர் என்றும் மோட்டார் சைக்கிளும் மீட்கப்பட்டதாகவும் கோலா லங்காட் மாவட்ட காவல்துறைத் தலைவர் அஹ்மட் ரித்வான் முகமட் நோர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here