கோலாலம்பூர்:
பெர்சாத்து கட்சித் தலைவர் டான்ஸ்ரீ முஹிடின் யாசினுடனான தனது உறவில் தற்போது விரிசல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுவதை பெர்சாத்து பொதுச் செயலாளர் டத்தோஸ்ரீ ஹம்சா ஜைனுடின் மறுத்துள்ளார்.
முஹிடினுடனான அவரது உறவைப் பற்றிய வதந்தி பரப்புபவர்கள் பெர்சாத்து மற்றும் பெரிகாத்தான் நேசனலில் (PN ) இடையே பிளவு ஏற்படுத்த முனைவதாக அவர் கூறினார்.
“நான்தான் பொதுச்செயலாளர்; அவர் தலைவர். என்னை கட்சிச் செயலாளராக நியமித்தார்.எனக்கு பிடிக்கவில்லையென்றால் விட்டுவிடுகிறேன்.அவருக்குப் பிடிக்கவில்லையென்றால் என்னை நீக்கிவிடுகிறார்.அவ்வளவுதான் .
“இடையில் இவ்வாறான கட்டுக் கதைகளை உருவாக்குகிறார்கள், நாங்கள் இருவருமே நன்றாக இருக்கிறோம். மேலும் எங்கள் வேலைகளையும் தேர்தலுக்கான பிரச்சாரத்தையும் செய்கிறோம்,” என்று அவர் நேற்று சிம்பாங் பெலாங்காயில் நடந்த PN இன் தேர்தல் பிரச்சாரக் கூட்டிடத்தில் அவர் இவ்வாறு கூறினார்.





















