நிபோங் தேபால்
இன்று அதிகாலை இரண்டு டிரெய்லர்கள் மற்றும் நான்கு வாகனங்கள் மோதிய சாலை விபத்தில் ஒருவர் இறந்தார், ஆறு பேர் காயமடைந்தனர். மேலும், 14 பேர் உயிர் தப்பினர்.
மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்பு சேவையின் (JBPM) செய்தித் தொடர்பாளர் கூறுகையில், இங்குள்ள சுங்கை பகாப்பில் உள்ள வடக்கு தெற்கு-புக்கிட் மின்யாக் நெடுஞ்சாலையில் உள்ள கிலோமீட்டர் (KM) 164.8 இல் அதிகாலை 4.30 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்தது.
அவரது கூற்றுப்படி, ஒரு பெண் உயிரிழந்ததாகவும் பிரேத பரிசோதனைக்காக இங்குள்ள சுங்கை பக்காப் மருத்துவமனைக்கு (HSB) கொண்டு செல்லப்பட்டார் என குறிபிட்டார்.
தற்போது, டிரெய்லரால் சுமந்து செல்லப்பட்ட மரக் குவியலின் கீழ் வாகனங்கள் அல்லது பாதிக்கப்பட்டவர்கள் சிக்கிக்கொள்ளாமல் இருப்பதை உறுதிப்படுத்த மீட்பு நடவடிக்கைகள் இன்னும் நடந்து வருகின்றன எனவும் அவர் கூறினார்.





















