பெலாங்காய் இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற அமிசாருக்கு பிரதமர் அன்வார் வாழ்த்து

பெலங்காய் மாநிலத் தொகுதியில் வெற்றி பெற்ற பாரிசான் நேஷனல் (BN) வேட்பாளர் டத்தோ அமிசார் அபு ஆதாமுக்கு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் வாழ்த்து தெரிவித்தார். இந்த வெற்றியானது பூலாய் நாடாளுமன்றம் மற்றும் சிம்பாங் ஜெரம் மாநில இடைத்தேர்தல்களில் காட்டப்பட்ட சிறப்பானதன் தொடர்ச்சியாகவும், அவதூறு மற்றும் குறுகிய இனவாதத்தின் கதைகளை உடைப்பதில் வெற்றி பெற்ற ஒற்றுமை அரசாங்கத்தில் உள்ள நண்பர்களின் ஒத்துழைப்பின் விளைவாகவும் இருப்பதாக அன்வார் கூறினார்.

மடானி பொருளாதார கட்டமைப்பின் அடிப்படையில் மக்களின் நல்வாழ்வுக்கான தேசிய வளர்ச்சி நிகழ்ச்சி நிரலை தொடர்ந்து ஊக்குவிக்க இது ஒற்றுமை அரசாங்கத்தை ஊக்குவிக்கிறது என்று அவர் இன்று ஒரு முகநூல் பதிவில் கூறினார். ஒற்றுமை அரசாங்கத்தின் மீது தொடர்ந்து நம்பிக்கை வைத்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்த பிரதமர், வெற்றிக்கு முதுகெலும்பாக இருந்த தேர்தல் எந்திரத்திற்கு தனது பாராட்டுகளையும் தெரிவித்தார்.

பெந்தோங் அம்னோ உச்சமன்ற உறுப்பினரான 53 வயதான அமிசார் 7,324 வாக்குகளைப் பெற்றார்.  பெரிக்காத்தான் நேஷனலின் (PN) காசிம் சமாத் (4,375 வாக்குகள்) மற்றும் சுயேச்சை வேட்பாளர் ஹஸ்லிஹெல்மி  (47 வாக்குகள்) பெற்றார். மும்முனை போட்டியில் அமிசார்  2,949 வாக்குகள் அதிகம் பெற்று  வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here