சிலாங்கூரில் நீர் விநியோகம் நள்ளிரவில் வழக்க நிலைக்கு திரும்பும்

ஷா ஆலம்:

பாதிக்கப்பட்ட பகுதிகளில் பராமரிப்பு மற்றும் மேம்பாட்டுப் பணிகள் 72.8 சதவீதத்தை எட்டியுள்ளதால், இன்று நள்ளிரவுவாக்கில் நீர் விநியோகம் வழக்க நிலைக்கு திரும்பும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இன்று காலை 9 மணி நிலவரப்படி, பாதிக்கப்பட்ட பகுதிகளில் நீர் விநியோகத்திற்கான பராமரிப்பு பணிகள் 72.8 சதவீதத்தை எட்டியுள்ளது என்றும் இதனால் அக்டோபர் 12 (வியாழக்கிழமை) நள்ளிரவில் நீர் விநியோகம் வழக்கத்திற்கு திரும்பும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது,” என்று ஆயிர் சிலாங்கூர் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

மேலும் பயனீட்டாளர்களின் குடியிருப்புக்கள் அமைந்துள்ள இடங்களின் தூரத்தின் அடிப்படையில் நீர் விநியோகம் கட்டம் கட்டமாக வழக்கத்திற்கு திரும்பும் என்றும் அது தெரிவித்துள்ளது.

இதற்கிடையில் சிலாங்கூர் ஆற்று நீரில் துர்நாற்றம் வீசியதைத் தொடர்ந்து, சுங்கை லங்காட்டில் 4 நீர் சுத்திகரிப்பு ஆலைகள் மூடப்பதுடன், நேற்று மாலை 7 மணி நிலவரப்படி 24.5 விழுக்காடு சீரடைந்து என்று ஆயிர் சிலாங்கூர் அந்த அறிக்கையில் மேலும் கூறியது.

இருப்பினும் நீர் விநியோகம் தடைப்பட்டுள்ள அனைத்து பகுதிகளுக்குமான நீர் விநியோகம் வியாழக்கிழமைக்குள் சீரான நிலைக்கு வரும் என்றும் அது கூறியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here