‘காவாலா’ கொடுத்த புகழ்… ஜப்பான் நிறுவனத்தின் முதல் இந்திய தூதராக நடிகை தமன்னா!

ஜப்பான் நாட்டை மையமாகக் கொண்டு இயங்கும் அழகு சாதன நிறுவனத்தின் முதல் இந்தியத் தூதராக நடிகை தமன்னா நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழில் சிறு இடைவேளைக்குப் பிறகு நடிகை தமன்னா ‘ஜெயிலர்’ படம் மூலம் திரும்பி வந்தார். இதில் ‘காவாலா’ பாடல் அவரை பட்டித்தொட்டியெங்கும் கொண்டு போய் சேர்த்தது. தற்போது பாலிவுட், வெப் சீரிஸ் என பிஸியாக வலம் வரும் தமன்னா, சில பிராண்ட்களின் விளம்பரத் தூதுவராகவும் இருக்கிறார்.

இந்நிலையில் தற்போது அவர் ஜப்பானின் ஷிசேடோ என்னும் அழகுசாதன நிறுவனத்தின் முதல் இந்தியத்தூதராக நியமிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள தமன்னா கூறுகையில், ‘இந்த விஷயம் குறித்து அதிகாரப்பூர்வமாக பகிர்ந்து கொள்ளதான் இத்தனை நாட்கள் காத்திருந்தேன். இந்தியாவில் ஷிசேடோவின் (shiseido) முதல் பிராண்ட் தூதராக இருப்பதில் பெருமை அடைகிறேன். 
அழகு என்பது வெளிப்புற தோற்றம் மட்டுமல்ல, தங்கள் சொந்த மேனியின் நிறத்தில் தன்னம்பிக்கை பெறுவது என்று நம்புகிறேன். ஷிசேடோவின் ஸ்கின் கேர் குடும்பத்தில் இணைவது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது’ எனத் தெரிவித்துள்ளார். 

’காவாலா’ புகழ்தான் தமன்னாவை இங்கு கொண்டுவந்துள்ளது என ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here