பட்ஜெட்டை தாக்கல் செய்தபோது திருக்குறளை மேற்கோள்காட்டிய பிரதமர்

கோலாலம்பூர்:

லேசிய பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அவர்கள் நேற்று 2024 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றிய போது திருக்குறளை மேற்கோள் காட்டியது பேசியது அனைவரையும் பரவசத்தில் ஆழ்த்தியது.

“இயற்றலும் ஈட்டலுங் காத்தலும் காத்த வகுத்தலும் வல்ல தரசு” என்று திருக்குறளை சுட்டி காட்டினார்.

பின்னர் அந்த குரள் விளக்கத்தையும் தெளிவுபடுத்தினார்.

முறையாக நிதி ஆதாரங்களை வகுத்து, அரசாங்க கருவூலத்திற்கான வருவாயைப் பெருக்கி, அதை பாதுகாத்துத் திட்டமிட்டு செலவிடுவதுதான் திறமையான நல்லாட்சிக்கு இலக்கணமாகும் என்று அவர் சொன்னார்.

எதிர்க்கட்சித் தலைவராக இருந்த போதும் இப்போது பிரதமராக பதவி வகிக்கும் காலத்திலும் அவர் திருக்குறளை சுட்டி காட்டி பேசுவதை மறப்பதில்லை.

ஒரு அரசாங்கம் தூய்மையாக இருக்க வேண்டும். நாட்டின் வருவாய் மக்களுக்கு நேரடியாக போய் சேர வேண்டும். ஒரு நல்ல ஆட்சியை வழங்க வேண்டும் என்பதில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மன உறுதியுடன் இருக்கிறார் என்பதற்கு இந்த திருக்குறள் ஒரு எடுத்துக்காட்டாக விளங்குகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here