Virtual meeting இல் இருக்கும்போது மசாஜ் செய்து கொண்ட டோனி பெர்னாண்டஸ்; விமர்சிக்கும் நெட்டிசன்கள்

கோலாலம்பூர்:

AirAsiaவின் தலைமைச் செயல் அதிகாரி டான் ஸ்ரீ டோனி பெர்னாண்டஸ் தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள ஒரு பதிவு நெட்டிசன்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது அவர் சட்டையின்றி விர்ச்சுவல் மீட்டிங்கில் கலந்து கொண்டு, மசாஜ் செய்யும் காணொளி ஒன்று நெட்டிசன்களிடமிருந்து எதிர்மறையான விமர்சனங்களை பெற்று வருகிறது.

கடந்த திங்களன்று அவர் வெளியிட்டுள்ள ஒரு சமூக ஊடகப் பதிவில் , ஒரேநேரத்தில் மசாஜ் மற்றும் கூட்டங்களை ஒன்றாக நடத்த அனுமதிக்கும் குறைந்த கட்டண மலேசிய விமான நிறுவனத்தை அதன் கலாச்சாரத்திற்காக பெர்னாண்டஸ் பாராட்டினார்.

அவர் LinkedIn னில்வெளியிட்டுள்ள அந்த இடுகையில், “அழுத்தமான வாரமாக இருந்தது, எனவே வெரானிட்டா யோசெஃபின் மசாஜ் செய்ய பரிந்துரைத்தார். இந்தோனேசியா மற்றும் ஏர் ஏசியா கலாச்சாரத்தை நான் விரும்பினேன், ஒரே நேரத்தில் நான் மசாஜ் செய்யலாம் மற்றும் நிர்வாகக் கூட்டத்தையும் நடத்தலாம்” என்றும் “நாங்கள் பெரிய முன்னேற்றம் அடைந்து வருகிறோம், உற்சாகமான நாட்கள் வரவுள்ளன,” என்று அவர் அந்தப்பதிவில்கூறினார் .

ஏர் ஏசியாவின் இந்த திறந்த மனது மற்றும் முற்போக்கான கலாச்சாரத்தினை சிலர் வழக்கத்திற்கு மாறான அணுகுமுறை எனப் பாராட்டியதால், இந்த இடுகை சமூக ஊடகத்தில் பல விமர்சுனைகளை பெற்றுவருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here