ஜனவரி – ஆகஸ்ட் வரை தேசியப் பதிவுத் துறை 5,695 குடியுரிமை விண்ணப்பங்களைப் பெற்றுள்ளது

கோலாலம்பூர்:

ந்த ஆண்டு ஜனவரி முதல் ஆகஸ்ட் வரை தேசியப் பதிவுத் துறை (NRD) மொத்தம் 5,695 குடியுரிமை விண்ணப்பங்களைப் பெற்றுள்ளது.

இந்த காலகட்டத்தில் குடியுரிமை ஒப்புதல்கள் மற்றும் நிலுவையில் உள்ள விண்ணப்பங்களின் எண்ணிக்கை குறித்து சலாமியா முகமட் நோரின் (PN-Temerloh) கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைபுடின் நசுஷன் இஸ்மாயில், மொத்த விண்ணப்பங்களில் 5,487 தற்போது பரிசீலனையில் உள்ளதாக தெரிவித்தார்.

மேலும், குறித்த காலகட்டத்தில், அமைச்சகம் 3,116 குடியுரிமைச் சான்றிதழ்களையும் வழங்கியுள்ளது என்று அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here