16 வயது சிறுமியைக் காணவில்லை -பொதுமக்களின் உதவியை நாடும் குடும்பத்தினர்

ஈப்போ:

காணாமல்போனதாக நம்பப்படும் பதின்மவயது சிறுமியைக் கண்டறிய உதவுமாறு அவரது குடும்பத்தினர் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

R .மணிமேகலை, 16, என்ற குறித்த சிறுமி கடந்த அக்டோபர் 8 (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 2.30 மணியளவில் காணாமல் போனதாக அறிவிக்கப்பட்டதாக ஈப்போ மாவட்ட காவல்துறை தலைவர், துணை ஆணையர் யஹாயா ஹாசன் தெரிவித்தார்.

“காணாமல்போனதாக கூறப்படும் சிறுமி தன் குடும்பத்துடன் தாமான் செம்பக்காவில் வசிக்கிறார். சிறுமி காணாமல்போனதாக கூறப்படும் அதே நாள் அதிகாலை 2.30 மணியளவில் தொலைக்காட்சியில் ஒரு நிகழ்ச்சியைப் பார்த்துவிட்டு வீட்டை விட்டு வெளியேறினார்” என்று அதே நாள் நண்பகலில் 42 வயதான அவரது தாய் போலீசில் புகாரளித்தார்” என்று அவர் நேற்று செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 17) வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

“தாயார் தங்கள் அக்கம் பக்கங்களில் தெரிந்தவர்கள் அறிந்தவர்களிடம் மக்கள் பற்றி விசாரித்தார் என்றும் மகளைத் தொடர்பு கொள்ள பலமுறை முயன்றும் பலனில்லை,” என்று அவர் கூறினார்.

“அவர்களுக்கு வீட்டில் குடும்பப் பிரச்சினை இல்லை என்றும், மணிமேகலை காணாமல் போனது இதுவே முதல் முறை என்றும் அவளுடைய அம்மா சொன்னார்.

சிலவேளை மகள் தனது காதலனுடன் சென்றிருக்கலாம் என குடும்பத்தினர் நம்புவதாக ஏசிபி யஹாயா தெரிவித்தார்.

இருப்பினும் மகளின் காதலன் யார் என்று அவர்களுக்கும் தெரியாது,” என்றும், குடும்பம் அவரது நல்வாழ்வைப் பற்றி கவலைப்படுவதாக கூறினார்.

மணிமேகலையின் இருப்பிடம் பற்றிய தகவல் தெரிந்தவர்கள் விசாரணை அதிகாரி இன்ஸ்பெக்டர் அனிஸ் சஃபிரா ரோஸ்லானை 018-786 5440 அல்லது ஈப்போ காவல் நிலையத்தை 05-245 1500 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் அல்லது அருகிலுள்ள காவல் நிலையத்தில் புகார் அளிக்கலாம் என்று அவர் மேலும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here