ரிங்கிட் மதிப்பு 25 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு சரிவு

லேசிய ரிங்கிட் மதிப்பு 25 ஆண்டுகளில் இல்லாத அளவுக்குச் சரிந்துள்ளது. 1997-1998 ஆசிய நிதி நெருக்கடியை அடுத்து பதிவான மிகப் பெரிய சரிவு இது என்று நிதிவல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.

இது கடந்த புதன்கிழமையன்று 0.3 விழுக்காடு சரிந்து, ஓர் அமெரிக்க டாலருக்கு நிகரான ரிங்கிட்டின் மதிப்பு 4.7607 ஆகப் பதிவானது. 2023ஆம் ஆண்டில் ஆசிய நாடுகளிடையே ஜப்பானிய யென்னுக்கு அடுத்து ஆக மோசமான சரிவை மலேசிய ரிங்கிட் சந்தித்துள்ளது.

ஓர் அமெரிக்க டாலருக்கு நிகராக 8 விழுக்காட்டுக்கும் அதிகமாக மலேசிய ரிங்கிட் சரிந்துள்ளது.

ஒரு சிங்கப்பூர் வெள்ளிக்கு நிகரான மலேசிய ரிங்கிட் மதிப்பு புதன்கிழமை காலை 10.27 மணிவரையில் மாற்றமில்லாமல் இருந்தது.

2023ல் இதுவரை ஒரு சிங்கப்பூர் வெள்ளிக்கு நிகராக மலேசிய ரிங்கிட் 5 விழுக்காட்டுக்கும் அதிகமாகச் சரிந்துள்ளது.

சிங்கப்பூர் வெள்ளியும் பலவீனமடைந்துள்ளதால் அதற்கு நிகரான ரிங்கிட் சரிவு அவ்வளவாக மோசமடையவில்லை.

இஸ்‌ரேல்-ஹமாஸ் போர் தொடர்பில் எழுந்துள்ள கவலைநிலைக்கிடையே அமெரிக்க டாலர் அதன் முந்தைய முதலீட்டுத் திட்டங்கள்வழி வலுபெற்றுள்ளது. இதனால், ரிங்கிட் மதிப்பு சரிவைச் சந்தித்து வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here