பொருட்கள் விலையேற்றத்தை எதிர்கொண்டு மக்கள் விவேகமாகச் செலவிடுவதற்கு பிரைஸ்கேச்சர் செயலி அறிமுகம் .

இன்றைய சூழ்நிலையில் அதிகரித்து வரும் பொருட்களின் விலைகளை எதிர்கொண்டு மக்கள் இன்னும் விவேகமான முறையில் ஙெ்லவு செய்வதற்கு வசதியாக உள்நாட்டு வாணிபம், வாழ்க்கைச் செலவின அமைச்சு பிரைஸ்கேச்சர் (PRICECATCHER) எனும் ஒரு புதிய செயலியை அறிமுகப்படுத்தி இருக்கிறது.

இந்தச் செயலி 2017ஆம் ஆண்டில் இருந்து அமலில் இருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டது. இந்தச் செயலியைப் பயன்படுத்தி பயனீட்டாளர்கள் அன்றாடச் செலவுகளைத் திட்டமிட்டுச் செய்யலாம் என்று அமைச்சின் தேசிய பொருட்கள் விலைப் பிரிவு இயக்குநர் செல்வி சண்முகம் கூறினார்.

இந்தச் செயலியில் விலை ஒப்பீடு செய்வதற்கு 480 வகையான பொருட்கள் இடம்பெற்றுள்ளன. ஈரப்பதம் உள்ள பொருட்கள், உலர்ந்த பொருட்கள், பொட்டலமிடப்பட்ட பொருட்கள், டின், கோத்தா, பாட்டிலில் அடைக்கப்பட்ட பொருட்கள், பால், குழந்தைகள் பயனீட்டுப் பொருட்கள், தூய்மைப் பொருட்கள் போன்றவை அதில் இடம்பெற்றுள்ளன.

ஒவ்வொரு பொருளின் விலையையும் இந்தச் செயலியைப் பயன்படுத்தி ஒப்பீடு செய்து சகாய விலையில்  விற்கப்படும் பொருட்களை அடையாளம் கண்டு பொதுமக்கள் வாங்கிக் கொள்ளலாம் என்று அவர் தெரிவித்தார்.

மேலும் இச்செயலியானது பயனீட்டாளர்களுக்கு தேர்வு செய்யும் வாய்ப்புகளையும் வழங்குகிறது. மேலும் பொருட்களை வாங்கக்கூடிய இடங்களும் இச்செயலியில் அடையாளம் காட்டப்படுகிறது. பயனீட்டாளர்களின் வங்திக்காக இவை பற்றிய தகவல்கள் அனைத்தும் அந்தச் செயலியில் இடம்பெற்றுள்ளன.

 ஒவ்வொரு நாளும் வேறுபடும் விலைப் பருவத்தை ஒப்பீடு செய்து பயனீட்டாளர்கள் விவேகமான முறையில் பொருட்களை வாங்கலாம். இயல்பான சூழ்நிலையைவிட இச்செயலியைப் பயன்படுத்துவதன் மூலம் சகாய விலையில் பொருட்களை வாங்குவதை அவர்கள் உணர முடியும் என்று செல்வி குறிப்பிட்டார்.

 பிரைஸ்கேச்சர் செயலி பட்டியலிடப்பட்டிருக்கும் ஒவ்வோர் இடத்திலும் விலைப் பருவத்தைக் காட்டும். தீபகற்ப மலேசியாவில் 10 கிலோ மீட்டர் சுற்றளவிலும் லாபுவான் கூட்டரசுப் பிரதேங்ம், சபா, சரவாக்கில் 20 கிலோ மீட்டர் சுற்றளவிலும்  இச்செயலியைப் பயன்படுத்தி பயனீட்டாளர்கள் பொருட்களை வாங்கலாம்.

அமைச்சு 1,500 இடங்களில் கண்காணிப்பு நடவடிக்கையை மேற்கொண்டிருக்கிறது. அவற்றுள் காலைச் சந்தை, பாசார் ராயா பெசார், பாசார் ராயா, மினி மார்க்கெட், பலசரக்குக் கடை போன்றவையும் அடங்கும். இத்தகவல்கள் யாவும் பிரைஸ்கேச்சர் செயலியில் காட்டப்படும் என்று குறிப்பிட்ட அவர், தூய்மைப் பொருட்கள், குளிர்பானங்கள் போன்றவற்றின் விலை ஒவ்வொரு மாதமும் சரி செய்யப்படும் என்றார்.

 காலை 9.30 மணிக்கு முன்னதாக விலைப் பருவம் சரி செய்யப்பட்டு செயலியில் பதிவேற்றம் செய்யப்படும். இதுவரை 315,789 பயனீட்டாளர்கள் இச்செயலியைப் பதிவிறக்கம் செய்திருக்கின்றனர். பிரைஸ்கேச்சர் செயலியைப் பயன்படுத்தும் பயனீட்டாளர்கள் புகார் செய்ய வேண்டுமெனில் 019-2794317, 019-8488000 என்ற எண்களில் வாட்ஸ்அப் வழி பதிவு செய்யலாம் என்று செல்வி சொன்னார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here