மிக ஆபத்தான உணவு. ஆசை விடவில்லை. துடிதுடித்து செத்துப்போனார் மனிதர்

சியோல்:

உலகில் மிகவும் ஆபத்தானது என அறிந்து 82 வயது நிரம்பிய முதியவர் சன்னக்ஜி எனும் ‛லைவ் ஆக்டோபஸ்’ உணவை ஆசையாக சாப்பிட்டார். அப்போது ஆக்டோபஸ் தொண்டையில் சிக்கிய நிலையில் அவர் மூச்சுத்திணறி மாரடைப்பு ஏற்பட்டு துடிதுடிக்க பலியானார்.

விஷத்தன்மை நிறைந்த பஃபர்ஃபிஷ் (Pufferfish) மற்றும் புல் தவளைகள் (Pull Frogs) உள்ளிட்ட உணவுகளின் பட்டியலில் இதுவும் இடம்பிடித்துள்ளது. மேலும் ‛லைவ் ஆக்டோபஸ்’ உணவை இப்படி சாப்பிட்டு ஒருவர் இறந்து போவது இதுதான் முதல் முறையல்ல. இதற்கு முன்பும் கூட சிலர் இறந்துள்ளனர். இதனால் இது ஆபத்தான உணவுகளின் பட்டியலில் இடம்பிடித்துள்ளது.

தென்கொரியாவின் தெற்கு நகரமாக குவாங்ஜூ உள்ளது. இந்த நகரை சேர்ந்தவர் 82 வயது முதியவர். இந்நிலையில் தான் இவர் வெவ்வேறு வகையான உணவுகளை சுவைப்பதில் ஆர்வமாக இருந்து வந்துள்ளார். இந்நிலையில் தான் உலகில் மிகவும் ஆபத்தான உணவுகளில் ஒன்றாக கருதப்படும் ‛சன்னக்ஜி’ எனும் உணவை அவர் சாப்பிட நினைத்தார். அதாவது ‛சன்னக்ஜி’ என்பது ‛லைவ் ஆக்டோபஸ்’ உணவாகும்.

அதாவது உயிருடன் இருக்கும் ஆக்டோபஸை உப்பு மற்றும் எள் எண்ணெய் உள்ளிட்டவை சேர்த்து பதப்படுத்தி வழங்குவது தான் ‛சன்னக்ஜி’ உணவாகும். அதன்பிறகு இந்த பதப்படுத்தப்பட்ட ஆக்டோபஸ் துண்டு துண்டாக வெட்டி பரிமாறப்படும். பொதுவாக ஆக்டோபஸை துண்டாக வெட்டினாலும் கூட tentacles(ஆக்டோபசில் கால் போன்ற அமைப்பு) நரம்புகளால் குறிப்பிட்ட நிமிடங்கள் அசைவுகள் இருக்கும்.

இது உயிரோடு ஆக்டோபசை உண்பது போன்ற உணர்வை ஏற்படுத்தும். உலக உணவு தினம்.. அன்னதோஷம் உங்க ஜாதகத்தில் இருக்கா? பசியோடு இருப்பவர்களுக்கு உணவு கொடுங்கள் இந்த உணவை தான் 82 வயது முதியவர் கடந்த 23ம் தேதி அவர் ‛சன்னக்ஜி’ உணவு சாப்பிட்டார்.அப்போது அவரது தொண்டை பகுதியில் ‛ஆக்டோபஸ்’ சிக்கிக் கொண்டது. இதனால் அவர் துடிதுடித்தார்.

இதையடுத்து தீயணைப்பு வீரர்கள் வரவழைக்கப்பட்டனர். ஆனால் அதற்குள் அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. மேலும் அவருக்கு திடீர் மாரடைப்பும் ஏற்பட்டது. இதனால் அவர் மேலும் துடித்தார். இதையடுத்து அவர் உடனடியாக அருகே உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் பரிதாபமாக இறந்தார். உலகிலேயே மிகவும் ஆபத்தான உணவுகளின் பட்டியலில் ‛சன்னக்ஜி’ எனும் ‛லைவ் ஆக்டோபஸ்’ இடம்பிடித்துள்ளது.

இதற்கு முன்பு கடந்த 2007 மற்றும் 2012 ம் ஆண்டுகளுக்கு இடையே உயிரோடு ஆக்டோபஸ் உணவு சாப்பிட்டு மூச்சுத்திணறல் ஏற்பட்டு 3 பேர் பலியாகினர். 2013ல் 2 பேரும், 2019 ல் ஒருவரும் இறந்துள்ளனர். இருப்பினும் கூட இந்த ‛லைவ் ஆக்டோபஸ்’ உணவு என்பது தென்கொரியாவில் மிகவும் பிரபலமாக உள்ளது. மேலும் இந்த உணவை சாப்பிடும்போது அவசரம் காட்டமால் நன்கு மென்று சாப்பிட வேண்டும். இதனை செய்தால் உயிரிழப்பில் இருந்து தப்பிக்கலாம். மேலும் மதுபானம் உள்ளிட்ட போதை பொருட்களை சாப்பிட்டு விட்டு இந்த உணவை எடுக்கக்கூடாது. ஏனென்றால் பொதுவாக போதை பழக்கம் என்பது மூச்சுத்திணறலை அதிகரிக்கும். அப்படியான சூழலில் இந்த உணவும் தொண்டையில் சிக்கினால் உயிர் வேகமாக போய்விடும் என்பதால் போதையில் இந்த பொருளை சாப்பிடக்கூடாது என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here