இருதய நோய்க்கு அடுத்து மனநலம் தொடர்பான பிரச்சினைகள் அதிகரிப்பு

எம். அன்பா

காஜாங்:

ழியர்களின் உடல்நலம் மேலும் அம்சங்களை உள்ளடக்கிய தேசிய மனிதவளக் கொள்கையை மனிதவள அமைச்சு உருவாக்கி வருகிறது என்று அதன் அமைச்சர் வ. சிவகுமார் நேற்று தெரிவித்தார். தேசிய மனிதவளக் கொள்கையை உருவாக்குவதில் அமைச்சு தீவிரமாக உள்ளது. 2019ஆம் ஆண்டு முதல் உருவாக்கப்பட்ட ஒரு கட்டமைப்பு இருந்தாலும் அது இன்னும் முழுமையாக நிறைவு பெறவில்லை என்று பாங்கியில் தேசிய தொழில் பாதுகாப்பு, சுகாதார நிறுவனத்தின் (நியோஷ்) ஆரோக்கியமான மனவளமிக்க வாழ்க்கைத் திட்டத்தில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் கூறினார்.

இருதய நோய்க்கு அடுத்தபடியாக மலேசியாவில் மனநலம் தொடர்பான பிரச்சினைகள் இரண்டாவது பெரிய உடல்நலப் பிரச்சினையாக இருக்கிறது. இதனை எதிர்கொள்வதற்கு தேசிய மனிதவளக் கொள்கையை உருவாக்குவது ஒரு முக்கியமான பணியாக அமையும் என்று சிவகுமார் குறிப்பிட்டார். மனநலம் தொடர்பான சிக்கலைச் சமாளிப்பதற்கு தலையீட்டு நடவடிக்கைகள் அவசியமாகின்றன. பணி இடத்தில் மனநலம் குறித்த பிரச்சினைகள் குறித்து கருத்துரைத்த அவர், பணி இடங்களில் மனநலம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளின் எண்ணிக்கை அபாயக் கட்டத்தில் இல்லை. குறைவான அளவிலேயே உள்ளது என்று தெரிவித்தார்.

செவித்திறன் குறைபாடு, கிருமிகள் தொற்று, நுரையீரல் நோய் போன்றவை தொழில் சார்ந்த பிற நோய்களுடன் ஒப்பிடும்போது ஒரே ஓர் உளவியல் சம்பவம் மட்டுமே கடந்த ஆண்டு பதிவாகி இருக்கிறது என்பதை 2022 தொழில் சார் புள்ளி விவரங்கள் காட்டுகின்றன என்றார் அவர். பணியிடங்களில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டாலும் உளவியல் மன அழுத்தம் தொடர்பான சம்பவங்கள் இன்னும் அதிகமாகவே இருக்கின்றன.

இந்தச் சவாலைச் சமாளிப்பதற்கு நியோஷ் பணியாளர்களின் உதவித் திட்டம் உட்பட பல முன் முயற்சிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இதன்வழி ஊழியர்களின் மனநலப் பிரச்சினைகளை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து சமாளிக்க உதவ முடியும். இதனால் அவர்களின் வேலை செயல்திறன் எவ்வகையிலும் பாதிக்கப்படமாட்டாது என்று சிவகுமார் குறிப்பிட்டார். இந்த நிகழ்ச்சியில் சுகாதார அமைச்சர் டாக்டர் ஸலிஹா முஸ்தபா, அதிகாரி ஹாஜி அயோப் ஆகியோர் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here